முத்துப்பேட்டை டுடே! தங்களை அன்புடன் வரவேற்கிறது, உங்களின் கருத்துக்களும், ஆலோசனைகளும் இல்லாமல் இப்பணி சாத்தியம் இல்லை என்று "MTEAM" ஆழமாக நம்புகிறது. எனவே உங்களுடைய பங்களிப்பையும், ஆதரவையும் வரவேற்கின்றோம். செய்திகள் மற்றும் கட்டுரைகள் சம்மந்தமாக தொடர்பு கொள்ள teammtoday@gmail.com என்ற மின்அஞ்சலுக்கு தங்களின் அஞ்சல்களை அனுப்புமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

Thursday, 14 November 2013

“தி மெஸேஜ்” (தமிழ்) – திரைப்பட விமர்சனம்

நேற்றைய வரலாற்றையும், நிதர்சன நிகழ்வுகளையும்,  நாளைய தொழில்நுட்பத்தையும் பாமரனுக்கும் எளிதில் சேர்க்கும் வலிமை மிக்க ஊடகம் சினிமா என்பதை மறுக்கவியலாது. பல்நோக்கு சிந்தனைக் குறைவின் வெளிப்பாடு இஸ்லாமிய சமூகத்தின் மீது ஆதிக்கம் செலுத்துவதால், சினிமாத்துறை பெரும்பான்மை முஸ்லிம்களால் கவனிக்கப்படாமலேயே விட்டுவிடப்பட்டது.

குஜராத் கலவரத்தை நடத்திய மோடி பிரதமர் வேட்பாளரா? – அமெரிக்க மதச் சுதந்திரத்திற்கான அமைப்பின் உறுப்பினர்கள் விமர்சனம்!

லவரத்தை தடுக்க இந்தியாவுக்கு ஏற்பட்ட தோல்வியின் முகமாக குஜராத் முதல்வர் மோடி இருக்கிறார். அவரை பிரதமர் பதவிக்கான வேட்பாளராக பா.ஜ.க அறிவித்துள்ளது வருத்தத்துக்கு உரியது என்று சர்வதேச மதச் சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையத்தின் உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.

வெற்றிச் சின்னம் காண்பித்த கால்பந்து வீரர் நீக்கம்!

கோல் அடித்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் இஸ்லாமியவாதிகளை ஆதரிக்கும் வெற்றிச் சின்னத்தை கையால் காண்பித்த ஸ்ட்ரைக்கர் அஹ்மது அப்துல் ஸாஹிரை எகிப்திய கால்பந்து க்ளப் நீக்கம் செய்துள்ளது.

Wednesday, 13 November 2013

ஹமாஸின் செய்தி தொடர்பாளராக முதன் முதலாக பெண் நியமனம்!


மாஸ் இயக்கம் தனது அதிகாரபூர்வ பேச்சாளராக ஒரு பெண்ணை நியமித்திருப்பது சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இனிமேல் இவரே சர்வதேச ஊடகங்களுக்கு ஹமாஸின் கருத்துக்களை அதிகாரபூர்வமாக வெளியிடுவார்.

திருவாரூரில் நடைபெற்ற SDPI கட்சியின் இரயில் மறியல் போராட்டம்!

லங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்பதை வலியுறுத்தி நேற்று  (12.11.2013) SDPI கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் இரயில் மறியல் போராட்டங்கள் நடைபெற்றது. 

முஸ்லிம் சமூகத்தின் பெயரால் அ.தி.மு.க. இணையதளம் முடக்கம்! தீவிர விசாரணை தேவை!! பாப்புலர் ப்ரண்ட் வேண்டுகோள்!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயலாளர் முஹம்மது ரசீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆட்சியிலிருக்கும் அ.தி.மு.க. அரசின் இணையதளம் கடந்த நவம்பர் 1ம் தேதி விஷமி ஒருவரால் இஸ்லாத்தின் பெயரால் முடக்கப்பட்டது. இணையதளத்தை முடக்கியவரை போலீஸார் நேற்று கைது செய்துள்ளனர். நேர்மையான விசாரணை மேற்கொண்டு உண்மையான குற்றவாளியை கைது செய்துள்ள காவல்துறை பாராட்டுக்குரியது.

Tuesday, 12 November 2013

பாட்னாவில் குண்டுவெடிப்பு நடத்திய 5 ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் கைது!

1.கோபால், 2.கணேஷ், 3.பவன், 4.விசால், 5.ராஜு 

"ஊமை'யாகிப் போன ஊடகங்கள்"

ரேந்திர மோடியின் ஏற்பாட்டின் பேரில், பெரும் செலவில் கூலிக்கு ஆள் அமர்த்தி 'பாட்னா'வில் குண்டுவெடிப்பை நிகழ்த்தியது, ஹிந்துத்துவ தீவிரவாதிகள் தான் என, தற்போது தெரிய வந்துள்ளது.

மாரடைப்பு வருவதை முன்கூட்டியே கண்டுபிடிக்கும் ஸ்கான் தொழில்நுட்பம் அறிமுகம்!


மாரடைப்பு வரக்கூடிய நிலையில் ஒருவர் இருக்கிறாரா என்று கண்டுபிடித்து சொல்லக்கூடிய ஒரு வழியை , ஏற்கனவே புற்றுநோயைக் கண்டுபிடிக்கப் பயன்படுத்தப்பட்டுவரும் ஒரு ஸ்கானிங் முறையின் மூலம் , தாங்கள் கண்டுபிடித்திருப்பதாக எடின்பரோவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

முஸ்லிம்கள் திருமணம்: தேவை மனமாற்றம்!


"ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணம் நடத்தவேண்டும்" என்பது பழமொழி. இப்பொழுது ஆயிரம் பேர் முன்னிலையில் அரசிற்குப் பயந்து திருமணம் நடத்தப்படுகிறது. காரணம் சட்டம் தான்.

Monday, 11 November 2013

முத்துபேட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

லங்கையில் நடைபெறும் காமன் வெல்த் மாநாட்டை இந்திய புறக்கணிக்க கோரி மதிய அரசை கண்டித்து முத்துபேட்டையில்  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர்! -மௌலானா அபுல்கலாம் ஆசாத் பிறந்த தினம் இன்று!

ந்திய வரலாற்றில் மறைக்க முடியாதமறுக்க முடியாத பங்காளரான மௌலானா அபுல் கலாம் முகியுத்தின் அகமது என்பவர் 11 நவம்பர் 1888 அன்று பிறந்தார். இவர்  இந்திய விடுதலை இயக்கத்தின் மூத்த அரசியல் தலைவரும்இஸ்லாமிய  அறிஞரும் ஆவார்.

காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வலியுறுத்தி 12ஆம் தேதி வேலைநிறுத்தம்! -அனைவரும் ஆதரிக்க எஸ்.டி.பி.ஐ கட்சி வேண்டுகோள்!

து குறித்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி அவர்கள் இன்று விடுத்துள்ள அறிக்கையில்: இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்களை இனப்படுகொலை செய்தது இலங்கை அரசு. பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். குழந்தைகளை கொத்து கொத்தாய் படுகொலை செய்தது இலங்கை ராணுவம். சரணடைந்தவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

அதிமுக இணையதளத்தை முடக்கிய பாகிஸ்தான் ஹேக்கர் ஈஸ்வரன் சென்னையில் கைது!

திமுகவின் அதிகாரப்பூர்வ இணையதளம் www.aiadmkallindia.org. கடந்த 1-ம் தேதி இந்த இணைய தளத்துக்குள் புகுந்த ஒருவர் அதை செயல்படவிடாமல் முடக்கி விட்டார். உடனே சில ஊடகங்கள் பாகிஸ்தான் தீவிரவாதிகள் சதி என்று செய்தி வெளியிட்டன. ஏனென்றால் அதில் சில வாசகங்கள் எழுதி இருந்தது.

உலகின் மிகச் சிறந்த சுற்றுலாத் தலமாக கேரளாவை தேர்வு செய்த லண்டன்!


லோன்லி பிளானட்’ என்ற சுற்றுலா வழிகாட்டி பிரசுர நிறுவனம், குடும்பத்தினரோடு விடுமுறையை கழிக்க உலகின் தலைசிறந்த 10 இடங்களை பட்டியலிட்டுள்ளது. இந்த பட்டியலில் நியூ யார்க், டென்மார்க், பராகுவே, ஐஸ்லாந்து, இத்தாலி, ஹவாய் தீவுகளுக்கு அடுத்தபடியாக கேரள மாநிலமும் இடம் பெற்றுள்ளது.

மாணவர்களை கவர விசா நிபந்தனைகளை எளிதாக்குகிறது ஆஸ்திரேலியா!

வெளிநாடுகளில் இருந்து அதிக மாணவர்கள் வருவதற்கு வசதியாக விசா நடைமுறைகளை எளிதாக்க ஆஸ்திரேலியா திட்டமிட்டுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் குறிப்பாக ஆசிய நாடுகளில் இருந்து அதிகளவிலான மாணவர்கள் ஆஸ்திரேலியா சென்று படிக்கின்றனர்.

கார்பொரேட்கள் ஊதும் மோடி பலூன் பறக்குமா?


“தினசரி காலை அரை மணிநேரம் ஐ.ஐ.டி மாணவர்களின் கணக்குகளை இன்டெர்நெட்டில் போட்டுப் பயிற்சி மேற்கொள்கிறார்” எனச் சமீபத்தில் ஒரு பத்திரிகை (Open, july 18, 2013) மோடி பற்றி எழுதியிருந்தது.

நவம்பர் 10: பயங்கரவாத எதிர்ப்பு தினமாக அறிவித்து ரத்த தான முகாம்களை நடத்திய இந்திய தவ்ஹீத் ஜமாஅத்!

வம்பர் 10ந்தேதியை பயங்கரவாத எதிர்ப்பு தினமாக அறிவித்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தமிழகம் முழுவதும் அதன் கிளை அமைப்புகளின் சார்பில் மாபெரும் ரத்த தான முகாம்களுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தது.இதன் படி,இன்று தமிழகம் முழுவதும் ரத்த தான முகாம்கள் எழுச்சியுடன் நடைபெற்றன.

Saturday, 9 November 2013

திருவாரூரில் நாளை மகளிர் விரைவு நீதிமன்றம் திறப்பு!

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் விரைவு மகிளா நீதிமன்றம் மற்றும் மாற்றுமுறைத் தீர்வு மையம் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை (நவ.10) நடைபெறுகிறது.

நைஜீரியா வாழ் இந்தியர்களுக்கு பிரச்சனயை உண்டாக்கும் BJP!

ந்தியாவில் சுற்றுலா தலமாக திகழும் BJP ஆளும் கோவாவில், நைஜீரியர்கள்  காவல்துறையால் தொடர்ந்து துன்புறுத்தப்படுவது வருத்தத்துக்கு உரியது என இந்தியாவுக்கான நைஜீரிய தூதர் கண்டனம் தெரிவித்துள்ளார். 

பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா தீவிரவாத அமைப்பு இல்லை! -மத்திய உளவுத்துறை அறிவிப்பு!

துரையில் உள்ள பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் தேசிய செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் முஹம்மது யூசுப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்தியாவின் 5 பெரிய ஷாப்பிங் மால்கள்!


ஷாப்பிங் மால்கள் அல்லது அடுக்குமாடி வணிக வளாகங்கள் என்று அறியப்படும் கட்டிடங்கள் தற்போது இந்தியாவின் எல்லா பெரிய நகரங்களிலும் முளைக்க தொடங்கியுள்ளன. இன்னும் 20 ஆண்டுகளில் ஷாப்பிங் மால்கள் இல்லாத நகரங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். முன்பெல்லாம் பெருநகரங்களில் மட்டுமே ஒன்றிரண்டு ஷாப்பிங் மால்களை பார்க்க முடிந்தது. இப்போது அனைத்து நகரங்களிலும் ஷாப்பிங் மால்களை காண முடிவதுடன் பெருநகரங்களில் பத்து, இருபது என்ற எண்ணிக்கையில் ஷாப்பிங் மால்கள் காணப்படுகின்றன. 

'கேம்பஸ் டே': முத்துப்பேட்டையில் நடைபெற்ற கேம்பஸ் ஃபிரண்டின் கொடி ஏற்று நிகழ்ச்சி!

கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா துவங்கப்பட்ட தினமான நவம்பர் 07-ம் நாள் ஒவ்வோர் ஆண்டும் ‘கேம்பஸ் டே’ என மாணவர்கள் கொண்டாடி வருகிறார்கள். சென்ற கேம்பஸ் டே முதல், மௌலான அபுல் கலாம் ஆசாத் பிறந்த தினமான நவம்பர் 11 நமது தேசிய கல்வி தினம் வரையிலான ஐந்து நாட்கள், அரசுகளின் தவறான கல்வி கொள்கை குறித்து தேசிய அளவிலான விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது. 

Friday, 8 November 2013

32-வது ஷார்ஜா புத்தகக் கண்காட்சி (SIBF-2013) துவக்கம்! மூன்றாம் ஆண்டாக இலக்கியச்சோலை, புதுயுகம் நூல்கள் பங்கேற்பு!

53 நாடுகள், 1010 பதிப்பகங்கள், 4,05,000 புத்தகங்கள், 180 மொழிகளில் பங்கு பெறுகின்றன! அப்துல் கலாம், கமல் ஹாசன் பங்கேற்பு!!
ஷார்ஜா: 32-வது ஷார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சி (Sharjah International Book Fair – SIBF 2013) நவம்பர் 6-ம் தேதி ஷார்ஜாவில் துவங்குகிறது. நவம்பர் 6 முதல் நவம்பர் 16 வரை நடைபெறும் இந்தக் கண்காட்சியில் மூன்றாம் ஆண்டாக இலக்கியச்சோலை தமிழ் நூல்களும், புதுயுகம் பதிப்பகத்தின் தமிழ் நூல்களும் பங்கேற்கின்றன.

இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக்கூடாது என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்! - நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட்!

விடுதலைப் புலிகளின் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளாராக பணிபுரிந்த இசைப்பிரியா இறந்து கிடந்தது போன்ற செய்தியை 2010ல் வெளியிட்டது சேனல்-4 தொலைக்காட்சி நிர்வாணமாக இறந்துகிடந்த இசைப்பிரியா பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி இருக்கலாம் என்று கூறப்பட்டது. இப்போது சேனல்4 தொலைக்காட்சி வெளியிட்டிருக்கும் காட்சிகள் இசைப்பிரியாவை இலங்கை ராணுவத்தினர் உயிருடன் பிடித்திருப்பதாக காட்டுகிறது. 

திருவாரூரில் மனிதநேய மக்கள் கட்சியினர் ரயில் மறியல்! -200 பேர் கைது

லங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துக்கொள்ள கூடாது என வலியுறுத்தி திருவாரூரில் இன்று மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் ரயில் மறியல் நடைபெற்றது.

இங்கிலாந்தில் பணிபுரியும் மருத்துவர்களில் 10-ல் ஒருவர் இந்தியர்!

ங்கிலாந்தில் நேற்று வெளியிடப்பட்ட மருத்துவத்துறை ஆய்வு ஒன்றின்படி அங்கு பணிபுரியும் மருத்துவர்களில் 25, 295 பேர் இந்தியர்கள் என்று தெரியவந்துள்ளது. அங்குள்ள மொத்த மருத்துவர்களின் எண்ணிக்கையைப் பார்க்கும்போது பத்தில் ஒருவர் இந்தியராக இருக்கின்றனர்.

Thursday, 7 November 2013

முத்துப்பேட்டையில் பரவி வரும் டெங்கு காய்சல்! -நடவடிக்கை எடுக்ககோரி முதல்வருக்கு மனு!


முத்துப்பேட்டையில் குழந்தைகளுக்கு பரவிவரும் டெங்கு காய்சலை கட்டுபடுத்த நடவடிக்கைகள் எடுக்குமாறு  தமிழக முதல்வரின் தனி பிரிவிற்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.

Friday, 1 November 2013

முத்துப்பேட்டை பேருராட்சி கூட்டத்தில் கொசுவலையுடன் வந்த கவுன்சிலரை படம் எடுத்த பத்திரிக்கையாளர்களுக்கு "அடி" "உதை"

முத்துப்பேட்டை பேரூராட்சி கூட்டம் தலைவர் அருணாச்சலம் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டம் தொடங்கும் போது 1வது வார்டு பாஜக கவுன்சிலர் மாரிமுத்து என்பவர் கொசுவலை ஒன்றை அணிந்து கொண்டு வீட்டிலிருந்து கிளம்பி வீதி வீதியாக வந்து கூட்டத்தில் கலந்துகொள்ள வந்தார். அதனை பத்திரிகையாளர்கள் படம் எடுத்தனர்.

தனியார் பேருந்துகளை உரிய முறையில் கண்காணிக்க தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்!

து குறித்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி விடுத்துள்ள அறிக்கையில்: தனியார் சொகுசு பேருந்துகளின் சேவை வேகமாக அதிகரித்து வருகின்றன. அரசு விரைவு பேருந்துகளில் சுத்தம், பராமரிப்பு இல்லாததாலும் போதிய அளவு எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்படாததாலும், தனியார் பேருந்துகளை போன்ற வசதிகளும்,சொகுசும் அவற்றில் இல்லாததாலும், அரசு பேருந்துகளின் கட்டணம் குறைவாக இருந்தாலும் மக்கள் தனியார் பேருந்துகளை நாடும் சூழல் உருவாகியுள்ளது.

TNPSC குரூப் -2 தேர்வுக்கான இலவசப்பயிற்சி!

ல்கலைக்கழக மானியக்குழு (UGC) நிதி உதவியுடன் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் பயிற்சி மையத்தில் வரும் 06.11.2013 முதல் 22.11.2013 வரை எஸ்.சி/எஸ்.டி/ஓ.பி.சி மற்றும்  சிறுபான்மை மாணவர்களுக்கு TNPSC குரூப்-2 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறும் என அக்கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.

வளம் மிக்க நாடுகளில் நார்வே முதலிடம்! -இந்தியா மீண்டும் செஞ்சுரி!

லக அளவில் வளமும் செழிப்பும் அதிகரித்து வருகின்றது என லெகாடம் ஆய்வு நிறுவனம் தெரிவிக்கிறது. இது வெளியிட்ட உலகச் செல்வவளக் குறியீட்டெண் பட்டியல்படி வளம் கொழித்த நாடுகள் பட்டியலில் 5 வது ஆண்டாக நார்வே முதலிடம் பெற்றுள்ளது.

முத்துப்பேட்டையில் பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல்! இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்

ந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலசெயலாளர் அபூபைசல் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதை கண்டிக்கும் முகமாக இன்று நடைபெற்ற பேரூராட்சி மன்ற கூட்டத்திற்கு 1 வது வார்டு கவுன்சிலர் கொசு வலை போர்த்தி வந்ததை படமெடுக்க முயன்ற பத்திரிக்கையாளர்களுடன் பேரூராட்சி மன்ற தலைவர் கோ.அருணாச்சலம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுபின்னர் பத்திரிக்கையாளர்களை தாக்கியும் உள்ளார்தாக்கப்பட்டவர்கள் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முத்துப்பேட்டை அருகே பஸ், லாரி நேருக்கு நேர் மோதி விபத்து!

முத்துப்பேட்டையை அடுத்த தம்பிக்கோட்டை ஐயப்பன் கோவில் அருகே உமா தேவி மினி பஸ் எதிரே வந்த நிலா சீ புட்ஸ் லாரியுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. 

ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம் அமைய பாப்புலர் ஃப்ரண்ட்-ன் தேசிய பிரச்சாரம் துவக்கம்!

பாப்புலர் ஃப்ரண்ட்டின் மாநில செயற்குழு கூட்டம் அக் 30 அன்று சென்னையில் மாநில தலைமையகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில் அவர்கள் தலைமை தாங்கினார்கள். இக்கூட்டத்தில் பொது செயலாளர் ஏ.காலித் முஹம்மது, செயலாளர்கள் ஜே.முஹம்மது ரசீன் மற்றும் எஸ்.இலியாஸ், பொருளாளர் ஆரிஃப் பைசல் மற்றும் பிற செயற் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த செயற்குழுவில் கீழ்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பாப்புலர் ஃப்ரண்ட் பற்றிய எந்த தகவல்களையும் ஊடகங்களோடு பகிர்ந்து கொள்ள வில்லை என IB மற்றும் NIA மறுப்பு!

பாப்புலர் ஃப்ரண்ட் ஒரு தீவிரவாத இயக்கம் என சித்தரித்து எந்த தகவல்களையும், ஊடகங்களோடு பகிர்ந்து கொள்ள வில்லை என்று புலனாய்வு அமைப்புகளான IB (Intelligence Bureau)மற்றும் NIA (NationalInvestigation Agency) மறுப்பு தெரிவித்துள்ளது. இந்திய பிரஸ் கவுன்சில் (Press Council of India - PCI) அனுப்பிய நோட்டிசுக்கு பதில் அளித்துள்ள புலனாய்வு அமைப்புகள், பாப்புலர் ஃப்ரண்டை தீவிரவாத இயக்கமென சில பத்திரிக்கைகள் கூறுவது போல் எந்த ஒரு தகவலும் தங்களிடம் இல்லை என பதில் மனு தாக்கல் செய்துள்ளனர்.