திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் விரைவு மகிளா நீதிமன்றம் மற்றும் மாற்றுமுறைத் தீர்வு மையம் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை (நவ.10) நடைபெறுகிறது.
மகிளா நீதிமன்றத்தை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி டி.எஸ். சிவஞானம் திறந்து வைக்கிறார். நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றம் மற்றும் சிறைத் துறை அமைச்சர் கே.பி. முனுசாமி தலைமையில் நடைபெறும் விழாவில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.டி. செல்வம், ஆந்திர மாநில உயர்நீதிமன்ற நீதிபதி ராஜா இளங்கோ, தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜ், திருவாரூர் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி எம்.என். முகம்மது அலி, திருவாரூர் தலைமை நீதித்துறை நடுவர் என். பாலசுப்பிரமணியன், மாவட்ட ஆட்சியர் சி. நடராசன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.காளிராஜ் மகேஷ் குமார் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

No comments:
Post a Comment