முத்துப்பேட்டை டுடே! தங்களை அன்புடன் வரவேற்கிறது, உங்களின் கருத்துக்களும், ஆலோசனைகளும் இல்லாமல் இப்பணி சாத்தியம் இல்லை என்று "MTEAM" ஆழமாக நம்புகிறது. எனவே உங்களுடைய பங்களிப்பையும், ஆதரவையும் வரவேற்கின்றோம். செய்திகள் மற்றும் கட்டுரைகள் சம்மந்தமாக தொடர்பு கொள்ள teammtoday@gmail.com என்ற மின்அஞ்சலுக்கு தங்களின் அஞ்சல்களை அனுப்புமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

Saturday, 26 October 2013

திரிசூல நாடகம் தொடர்பாக அனைத்து முஹல்லா மற்றும் இயக்கங்களின் கூட்டம்!

முத்துப்பேட்டை: கடந்த சில நாட்களுக்கு முன்பு முத்துப்பேட்டை தர்கா அருகே ஜீவானந்தம் என்பவறின் நிலத்தில் திரிசூலத்தை நட்டுவிட்டு தானாக முளைத்ததாக கூறி அமைதியை சீர்குலைக்கும் விதமாக நாடகமாடியது தொடர்பாக முத்துப்பேட்டை அனைத்து முஹல்லா மற்றும் அணைத்து இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டம் நேற்று மாலை அரபு சாஹிப் பள்ளி மதரசாவில் நடைபெற்றது.

இதில் திரிசூல நாடகம் தொடர்பாகவும், அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றியும் விவாதிக்கப்பட்டது. இதில் அனைத்து முஹல்லா தலைவர் எஸ்.எம்.பாக்கர் அலி தலைமை தாங்கினார். மற்றும் ஆசாத் நகர் பள்ளி, புது பள்ளி, முஹைதீன் பள்ளி, குட்டியார் பள்ளி, குத்பா பள்ளி, அரபு சாஹிப் பள்ளி, பேட்டை பள்ளி, மதினா பள்ளி, மக்கா பள்ளி ஆகிய அணைத்து பள்ளிகளின் நிர்வாகிகளும். த.மு.மு.க., பாப்புலர் ஃபிரண்ட், த.த.ஜ., எஸ்.டி.பி.ஐ, ஆகிய இயக்கங்களின் நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.

இதில் எடுக்கப்பட்ட தீர்மானம்:

1. திங்கள் கிழமை கலெக்டரை சந்தித்து உடனே  நடவடிக்கை எடுக்கக்கோறியும், நாடகமாடிய நபரை உடனே கைது செய்ய வலியுறித்தியும்,  அனைத்து முஹல்லா மற்றும் அனைத்து இயக்கங்கள் கையெழுத்திட்டு மனு கொடுக்க வேண்டும்.

2. இதில் அனைத்து முஹல்லா மற்றும் இயக்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவேண்டும்.

3. மேற்படி நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அனைத்து மக்களையும் ஒன்றுகூட்டி கண்டன ஆர்பாட்டம் நடத்தவேண்டும்.

4. இனிவரும் காலங்களில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் இதேபோல அணைத்து முஹல்லா மற்றும் இயக்கங்கள் ஆலோசனை நடத்தி தீர்வுகாணவேண்டும். 

ஆகிய தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டது.








1 comment:

  1. இயக்கங்களின் ஒற்றுமையினால் இதில் முஸ்லிம்கள் சாதிக்க முடியும் இன்ஷாஅல்லாஹ்

    ReplyDelete