முத்துப்பேட்டை டுடே! தங்களை அன்புடன் வரவேற்கிறது, உங்களின் கருத்துக்களும், ஆலோசனைகளும் இல்லாமல் இப்பணி சாத்தியம் இல்லை என்று "MTEAM" ஆழமாக நம்புகிறது. எனவே உங்களுடைய பங்களிப்பையும், ஆதரவையும் வரவேற்கின்றோம். செய்திகள் மற்றும் கட்டுரைகள் சம்மந்தமாக தொடர்பு கொள்ள teammtoday@gmail.com என்ற மின்அஞ்சலுக்கு தங்களின் அஞ்சல்களை அனுப்புமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

Tuesday, 8 October 2013

மோடி சிறுபான்மையினருக்கு எதிராக செயல்பட்டதை யாரும் இன்னும் மறக்கவில்லை! -திருநாவுக்கரசர்

ரோட்டிற்கு வருகை தந்த காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்பேட்டியின் போது, "பாஜகவின் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டதற்கு பாஜகவிலே எதிர்ப்பு அதிகரித்துள்ளது. மூத்த தலைவர்களே மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஆர்எஸ்எஸ்-ன் நிர்பந்தம் காரணமாகவே மோடி அறிவிக்கப்பட்டுள்ளார். மோடி இப்போது தான் தேசிய அரசியலுக்கு வந்துள்ளார். எனவே நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் மோடி இருக்கிறார்.
ராகுல் காந்தி தேசிய அரசியலில் இருப்பவர். மக்கள் அவரைத் தான் பிரதமராக கொண்டு வர ஆர்வமாக இருக்கின்றனர். மோடி கூட்டத்திற்கு அதிகமான எண்ணிக்கையில் மக்கள் கூடியதாக பாஜக பெருமை பேசுகிறது. இதே திருச்சியில் சோனியா காந்திக்கு அதனை விட அதிகமாக மக்கள் கூடினர். மோடி சிறுபான்மையினருக்கு எதிரானவர். சிறுபான்மையினருக்கு எதிராக செயல்பட்டதை யாரும் இன்னும் மறக்கவில்லை.

ராகுல் காந்தியின் எதிர்ப்பு காரணமாகத் தான் அவசர சட்டத்தை அரசு திரும்ப பெற்றுக் கொண்டது. அனைத்து கட்சியினர் கூட்டத்தை கூட்டி ஒப்புதல் பெற்ற பின்னரே அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது. மக்கள் எதிர்க்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்டு, பாஜக தனது கருத்தில் பின் வாங்கி விட்டது. அது தான் உண்மை.
வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, மறைமுகமான போட்டி காங்கிரஸ் கட்சி - ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு இடையே தான் ஏற்பட்டுள்ளது" என்று கூறினார்.

No comments:

Post a Comment