முத்துப்பேட்டை டுடே! தங்களை அன்புடன் வரவேற்கிறது, உங்களின் கருத்துக்களும், ஆலோசனைகளும் இல்லாமல் இப்பணி சாத்தியம் இல்லை என்று "MTEAM" ஆழமாக நம்புகிறது. எனவே உங்களுடைய பங்களிப்பையும், ஆதரவையும் வரவேற்கின்றோம். செய்திகள் மற்றும் கட்டுரைகள் சம்மந்தமாக தொடர்பு கொள்ள teammtoday@gmail.com என்ற மின்அஞ்சலுக்கு தங்களின் அஞ்சல்களை அனுப்புமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

Friday, 25 October 2013

முத்துப்பேட்டையில் எந்நேரமும் பரபரப்பை ஏற்படுத்துவது பாசிசவாதிகளின் திட்டம் ?

முத்துப்பேட்டையில் அன்றாடம் எதோ ஒரு வகையில் ஒரு சலசலப்பை ஏற்படுத்துவது வாடிக்கையாகிவிட்டது. அந்த வகையில் கடந்த 20/10/13 அன்று தர்காவிற்கு எதிரில் ஒருவருக்கு சொந்தமான இடத்தில் திரிசூலம் முளைத்ததாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினர். 


இதனை தொடர்ந்து கடந்த 23/10/13 அன்று  தில்லைவிளாகம் நோக்கி மோட்டார்சைக்கிளில் பள்ளியமேட்டை சேர்ந்த ராஜீவ் என்பவரும், தில்லைவிளாகத்தை சேர்ந்த கணபதி என்பவரும் சென்று கொண்டிருக்கையில் இருவருக்கு அடையாளம் தெரிந்த ஒரு பாசிசவாதி  தில்லைவிளாகம் வரை அழைத்து செல்லும்படி கேட்டுள்ளார். 

இவர்கள் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளனர், போகும் வழியில் உள்ள ஜாம்புவானோடை தர்ஹாவை நெருங்கியதும் அந்த வாலிபர் ஜெய்காளி, ஓம்காளி என்று சத்தம் போட்டுள்ளார். அப்போது அப்பகுதியை சேர்ந்த சேக்தாவூது என்பவர் ஏன் இங்கு வந்து சத்தம் போடுகிறார் என்று கேட்டு அதட்டியுள்ளார்,  உடனே அந்த வாலிபர் ஓடியுள்ளார்.

இதுகுறித்து முத்துப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் வழக்குப்பதிவு செய்து சேக்தாவூது, ராஜீவ், கணபதி ஆகிய 3 பேரையும் கைது செய்து, திருத்துறைப்பூண்டி ஜுடீசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினார். தப்பியோடிய வாலிபரை தேடிவருகின்றனர்.

இதுபோன்று தேவை இல்லாத பிரச்சனைகளை ஏற்படுத்தி இதில் அப்பாவி முஸ்லிம்களை சிக்கவைக்க வேண்டும் என்பதும் முத்துப்பேட்டையில் அமைதியை சீர்குலைக்க வேண்டும் என்பதும்  இந்துத்துவா வாதிகளின் திட்டமாகவுள்ளது.

No comments:

Post a Comment