முத்துப்பேட்டை டுடே! தங்களை அன்புடன் வரவேற்கிறது, உங்களின் கருத்துக்களும், ஆலோசனைகளும் இல்லாமல் இப்பணி சாத்தியம் இல்லை என்று "MTEAM" ஆழமாக நம்புகிறது. எனவே உங்களுடைய பங்களிப்பையும், ஆதரவையும் வரவேற்கின்றோம். செய்திகள் மற்றும் கட்டுரைகள் சம்மந்தமாக தொடர்பு கொள்ள teammtoday@gmail.com என்ற மின்அஞ்சலுக்கு தங்களின் அஞ்சல்களை அனுப்புமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

Saturday, 26 October 2013

இராணுவ ஆட்சிக்கு விரைவில் முடிவு!: முஹம்மது முர்ஸி

கெய்ரோ: எகிப்தில் இராணுவ ஆட்சிக்கு விரைவில் முடிவு ஏற்படும் என்று சதிப் புரட்சியால் வெளியேற்றப்பட்ட அந்நாட்டின் முதல் ஜனநாயக அதிபர் முஹம்மது முர்ஸி கூறியுள்ளார்.
 
தன் மகன் உஸாமாவுக்கு எழுதிய கடிதத்தில் முர்ஸி இதனை தெரிவித்துள்ளார். தலைநகரான கெய்ரோவில் இருந்து 245 கி.மீ தொலைவில் உள்ள அல் மின்ஆவில் நடந்த கண்டனப் பேரணியில் உரையாற்றும்போது உஸாமா, தன் தந்தையின் கடிதத்தை வாசித்தார்.
 
எகிப்திய மக்களுக்கும், இராணுவ சர்வாதிகார அரசுக்கு எதிராக போராடுபவர்களுக்கும் முர்ஸி வாழ்த்து தெரிவித்துள்ளார். முர்ஸி தனது கடிதத்தில்,”இராணுவ அரசுக்கு எதிராக போராடியவர்கள் சிந்திய இரத்தம் வீணாகாது. அவர்களின் இலட்சியம் நிறைவேறும்என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment