2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்ட அரசியல் இடைத்தரகர் நீரா ராடியாவின் தொடர்புகளும், தலையீடும் தொலைத்தொடர்பு துறையையும் தாண்டி பல துறைகளை ஆட்சி செய்ததாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல்களின் பதிவு பற்றி ஆய்வு செய்த 10 நபர் கமிட்டி, அவற்றின் முக்கிய சாரம்சங்களை சுப்ரீம் கோர்ட்டில் சமர்ப்பித்தது. அவற்றை பரிசோதித்த நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, வி. கோபால் கவுடா ஆகியோர் கொண்ட அமர்வு ‘இந்த உரையாடல்களின் மூலம் ரெயில்வே வாரிய உறுப்பினர்கள் மூலம் சில விவகாரங்களில் பணம் கை மாறிய விவரமும் தெரிய வந்துள்ளது.
இவற்றை ஒருதரப்பு பார்வையாக மட்டுமே கருதாமல் இது தொடர்பாக மேலும் ஆதாரங்களை சேகரித்து உரிய விசாரணை நடத்த வேண்டும். இந்த தொலைபேசி உரையாடல்களை அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தையும் கடந்து மிகவும் பரந்து, விரிந்து வியபித்துள்ளது.
இவ்விவகாரத்தில் சி.பி.ஐ. வேண்டிய ஆதாரங்களை கைப்பற்றும் வரை மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நாட்டின் பாதுகாப்பு கருதி போதிய நேரத்தை எடுத்துக் கொண்டு தகுந்த ஆதாரங்களை சேகரிக்க வேண்டும்.
இதில் யூகங்களுக்கு இடம் அளித்தால் அது தேசிய பாதுகாப்புக்கு உகந்தது அல்ல’ என்று கூறியுள்ளனர்.

No comments:
Post a Comment