முத்துப்பேட்டை டுடே! தங்களை அன்புடன் வரவேற்கிறது, உங்களின் கருத்துக்களும், ஆலோசனைகளும் இல்லாமல் இப்பணி சாத்தியம் இல்லை என்று "MTEAM" ஆழமாக நம்புகிறது. எனவே உங்களுடைய பங்களிப்பையும், ஆதரவையும் வரவேற்கின்றோம். செய்திகள் மற்றும் கட்டுரைகள் சம்மந்தமாக தொடர்பு கொள்ள teammtoday@gmail.com என்ற மின்அஞ்சலுக்கு தங்களின் அஞ்சல்களை அனுப்புமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

Tuesday, 8 October 2013

இந்தியா, இலங்கை இடையே 2 ஒப்பந்தம்! -சல்மான் குர்ஷித் முன்னிலையில் கையெழுத்து!


த்திய வெளியுறவு துறை மந்திரி சல்மான் குர்ஷித் 2 நாள் பயணமாக இன்று இலங்கை சென்றார். அங்கு, அமைதிப் போரின்போது மரணம் அடைந்த இந்திய வீரர்களின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் இலங்கை வெளியுறவுத்துறை மந்திரி பெரிஸ் மற்றும் முக்கிய தலைவர்களை சந்தித்து முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்தினார். 

இந்த சந்திப்பின்போது, சல்மான் குர்ஷித் முன்னிலையில் இந்தியா-இலங்கை இடையே இரண்டு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்திய உதவியுடன் இலங்கையின் சம்பூரில் அனல்மின் நிலையம் அமைப்பது மற்றும் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளை பயிற்றுவிப்பதற்கான திட்ட ஒப்பந்தம் கையெழுத்தாகின.

No comments:

Post a Comment