முத்துப்பேட்டை டுடே! தங்களை அன்புடன் வரவேற்கிறது, உங்களின் கருத்துக்களும், ஆலோசனைகளும் இல்லாமல் இப்பணி சாத்தியம் இல்லை என்று "MTEAM" ஆழமாக நம்புகிறது. எனவே உங்களுடைய பங்களிப்பையும், ஆதரவையும் வரவேற்கின்றோம். செய்திகள் மற்றும் கட்டுரைகள் சம்மந்தமாக தொடர்பு கொள்ள teammtoday@gmail.com என்ற மின்அஞ்சலுக்கு தங்களின் அஞ்சல்களை அனுப்புமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

Monday, 14 October 2013

மன்னார்குடி: சிறுவர்களால் வந்த விபரீதம்! 6 வீடுகள் எரிந்து நாசம்!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 வீடுகள் எரிந்து சேதமடைந்தன. சிறுவர்கள் பட்டாசு வெடித்து விளையாடிய போது ராக்கெட் வெடி கூரையில் பட்டு பாலு என்பவர் வீட்டில் தீ பற்றி உள்ளது. காற்று பலமாக வீசியதால் அருகில் இருந்த வீடுகளுக்கும் தீ பரவியதாகக் கூறப்படுகிறது. 


இதனையடுத்து, வீட்டில் வசித்தவர்கள் வீட்டை விட்டு வெளியேறினர். தகவலறிந்த மன்னார்குடி தீயணைப்பு துறையினர் பொதுமக்களுடன் இணைந்து தீயை அணைத்தனர். சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment