சமையல் எரிவாயு சிலிண்டர்களை இந்தியாவின் 5 பெருநகரங்களில் உள்ள பெட்ரோல் பங்க்களின் மூலம் விற்பனை செய்யும் புதிய திட்டத்தை மத்திய மந்திரி வீரப்ப மொய்லி பெங்களூரில் நாளை மறுநாள் (5ம் தேதி) தொடங்கி வைக்கிறார்.
முதல் கட்டமாக டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, சென்னை ஆகிய பெருநகரங்களில் எண்ணை நிறுவனங்களின் சார்பில் நடத்தப்படும் பெட்ரோல் பங்க்களில் மட்டும் 5 கிலோ எடை கொண்ட இந்த சிலிண்டர்கள் விற்கப்படும்.
பெட்ரோல் பங்க்கள் நள்ளிரவு வரை திறந்திருப்பதால் இந்த புதிய திட்டத்தின் மூலம் வெளி மாவட்டங்களில் இருந்து மேற்கண்ட பெருநகரங்களில் தற்காலிகமாக தங்கி படிக்கும் மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் பலன் அடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், மானிய விலையில் இந்த சிலிண்டர்கள் விற்கப்படாது, வெளி மார்க்கெட் விலைக்கே கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது.

No comments:
Post a Comment