முத்துப்பேட்டை டுடே! தங்களை அன்புடன் வரவேற்கிறது, உங்களின் கருத்துக்களும், ஆலோசனைகளும் இல்லாமல் இப்பணி சாத்தியம் இல்லை என்று "MTEAM" ஆழமாக நம்புகிறது. எனவே உங்களுடைய பங்களிப்பையும், ஆதரவையும் வரவேற்கின்றோம். செய்திகள் மற்றும் கட்டுரைகள் சம்மந்தமாக தொடர்பு கொள்ள teammtoday@gmail.com என்ற மின்அஞ்சலுக்கு தங்களின் அஞ்சல்களை அனுப்புமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

Wednesday, 9 October 2013

மேற்குலகம் எகிப்தின் சதிப்புரட்சி நிர்வாகத்துக்கு உதவ வேண்டும்! -இஸ்ரேலிய அமைச்சர்

கிப்தின் ஜனாதிபதி முர்ஸியை வீழ்த்தி ஆட்சியைப் பிடித்துள்ள புதிய நிர்வாகத்துக்கு  பொருளாதார உதவிகளை செய்யுமாறு மேற்குலகுக்கு இஸ்ரேலிய பிரதி வெளிஉறவுத்துறை அமைச்சர் ஸெவ் எல்கின் அழைப்பு விடுத்துள்ளார்.


இராணுவ சதிப்புரட்சி மூலம் ஆட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ள முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் மீண்டும் ஆட்சிக்கு வராமலிருக்க  இந்த உதவிகள் செய்யப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த திங்கள் இஸ்ரேலின் பார்இலான் பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய அவர், எகிப்துக்கு உதவிகள் வழங்கப்படாத போது, அவர் சொல்லும் 'கடும்போக்கு இஸ்லாமிய சக்திகள்' மீண்டும் ஆட்சிக்கு வரலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment