பாபரி மஸ்ஜித் இடிப்பு விவகாரத்தில் சதிச் செயலில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கிலிருந்து அத்வானி உள்ளிட்ட 20 பேரை விடுவித்ததை எதிர்த்து சி.பி.ஐ. தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு வரும் டிசம்பர் 12ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
அத்வானி உள்ளிட்ட 20 பேரை விடுவித்து சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, கடந்த 2010ஆம் ஆண்டு அலாகாபாத் உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சி.பி.ஐ. காலதாமதமாக மேல்முறையீடு செய்ததால் சர்ச்சை எழுந்தது.
இந்நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதி எச்.எல். தத்து தலைமையிலான அமர்வு முன்பு திங்கள்கிழமை இந்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் வரும் டிசம்பர் 12ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

No comments:
Post a Comment