சென்னை: பா.ஜ.க. மாநில செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள போலீஸ் பக்ருதீனை ஆஜர்படுத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்திய தேசிய லீக் கட்சியின் பொதுச் செயலாளர் தடா அப்துல் ரஹீம் தாக்கல் செய்துள்ள ஆட்கொணர்வு மனுவில், போலீஸ் பக்ருதீனை என்கவுன்டர் செய்ய காவல்துறையினர் திட்டமிட்டுள்ளதாகவும், இதனால் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த மனு நீதிபதி சத்திய நாராயணன் தலைமையிலான அமர்வு முன்பு இன்று பிற்பகலில் விசாரணைக்கு வருகிறது.
No comments:
Post a Comment