பிச்சை எடுத்த 6 குழந்தைகளை மீட்டு உண்டு உறைவிடப் பள்ளியில் ஆட்சியர் சேர்த்துள்ளார். ஆட்சியரின் இந்த மனிதநேய செயலை பெரம்பலூர் மக்கள் பாராட்டி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா வெண்பாவூர் கிராமத்தில் நேற்று முன்தினம் 6 குழந்தைகள் பிச்சை எடுத்துக் கொண்டிருப்பதாக ஆட்சியர் தரேஸ் அகமதுவிற்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, ஆட்சியரின் உத்தரவின்பேரில், மாவட்ட சமூக நல அலுவலர் பேச்சியம்மாள், ஆர்.ஐ. மாயகிருஷ்ணன், வி.ஏ.ஓ. அமிர்தலிங்கம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்பு திட்ட பணியாளர்கள் அடங்கிய குழு வெண்பாவூருக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியுள்ளது.
அதிகாரிகளின் விசாரணையில், பிச்சை எடுத்த குழந்தைகள் 6 பேரும், விழுப்புரம் மாவட்டம் கிழக்கு ராஜா பாளையத்தைச் சேர்ந்த அருணாச்சலம் என்பவரின் குடும்பத்தினர் என தெரிய வந்துள்ளது. பிச்சை எடுத்தவர்கள், ஆறுமுகம் (17), இளையராஜா (12), சேராக்குளத்தான் (4), ராஜேஸ்வரி (8), பூவாயி (3) மற்றும் அருணாசலத்தின் தங்கை மகன் அம்மாசி (12) ஆகியோர் என்பதும், குடும்ப வறுமையின் காரணமாக இவர்கள் பிச்சை எடுத்து வருவதும் தெரிந்திருக்கிறது.
இந்த தகவலை அதிகாரிகள் குழு, மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்துள்ளனர். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆட்சியர், அந்த 6 குழந்தைகளையும் பெரம்பலுர் குழந்தை நலக்குழுவினரிடம் ஒப்படைத்து, அக்குழந்தைகளை உண்டு உறைவிடப் பள்ளியில் சேர்க்க சொல்லி இருக்கிறார்.
இதையடுத்து, அந்த குழந்தைகள், நலக்குழுவினரால் வெண்பாவூர் உண்டு உறைவிட சிறப்பு பயிற்சி மையத்தில் சேர்க்கப்பட்டு, அவர்கள் படிக்க வழி செய்யப்பட்டுள்ளது.
பிச்சை எடுத்த குழந்தைகளை மீட்டு பள்ளியில் சேர்த்த ஆட்சியரின் மனிதநேய செயலை பெரம்பலூர் மக்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர்.

No comments:
Post a Comment