முத்துப்பேட்டை டுடே! தங்களை அன்புடன் வரவேற்கிறது, உங்களின் கருத்துக்களும், ஆலோசனைகளும் இல்லாமல் இப்பணி சாத்தியம் இல்லை என்று "MTEAM" ஆழமாக நம்புகிறது. எனவே உங்களுடைய பங்களிப்பையும், ஆதரவையும் வரவேற்கின்றோம். செய்திகள் மற்றும் கட்டுரைகள் சம்மந்தமாக தொடர்பு கொள்ள teammtoday@gmail.com என்ற மின்அஞ்சலுக்கு தங்களின் அஞ்சல்களை அனுப்புமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

Wednesday, 23 October 2013

கண் சிகிட்சைப்பெற அப்துல் நாஸர் மஃதனிக்கு உச்சநீதிமன்றம் அனுமதி!

பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள கேரள மாநில பி.டி.பி கட்சி தலைவர் அப்துல் நாஸர் மதானிக்கு கண் சிகிட்சை பெற உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
 
அவசரமாக கண் அறுவை சிகிட்சை நடத்தாவிட்டால் மதானியின் இடது கண் பார்வை இழக்கப்படும் என்று வழக்குரைஞர்களான பிரசாந்த் பூஷன், ஹாரிஸ் பீரான் ஆகியோரின் வாதத்தை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம் அப்துல் நாஸர் மதானிக்கு கண் அறுவை சிகிட்சை நடத்த அனுமதி வழங்கியது.
 
மேலும் இவ்வழக்கில் கேரள அரசையும் கட்சிதாரராக இணைக்கவேண்டும் என்று கோரி அப்துல் நாஸர் மதானி அளித்த மனுவில் கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.இரண்டு வாரத்திற்குள் கேரள அரசு பதிலளிக்கவேண்டும்.
 
வழக்குரைஞர்களின் கோரிக்கையை ஏற்று பெங்களூரில் உள்ள டாக்டர் அகர்வால் ஹெல்த் கெயர் லிமிட்டடில் மதானிக்கு கண் அறுவை சிகிட்சை நடத்தப்படும். சிகிட்சையின் போது மதானியின் மனைவி சூஃபியா உடனிருக்கலாம் என்ற கோரிக்கையை நீதிபதிகளான ஹெச்.எல்.கோகலே, ஜெ.சலமேஷ்வர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் அங்கீகரித்தது. இவ்வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் அடுத்த மாதம் 19-ஆம் தேதிக்கு முன்னரே சிகிட்சையை முடித்திருக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

No comments:

Post a Comment