முத்துப்பேட்டை டுடே! தங்களை அன்புடன் வரவேற்கிறது, உங்களின் கருத்துக்களும், ஆலோசனைகளும் இல்லாமல் இப்பணி சாத்தியம் இல்லை என்று "MTEAM" ஆழமாக நம்புகிறது. எனவே உங்களுடைய பங்களிப்பையும், ஆதரவையும் வரவேற்கின்றோம். செய்திகள் மற்றும் கட்டுரைகள் சம்மந்தமாக தொடர்பு கொள்ள teammtoday@gmail.com என்ற மின்அஞ்சலுக்கு தங்களின் அஞ்சல்களை அனுப்புமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

Saturday, 12 October 2013

மலாலாவுக்கு ஐரோப்பிய யூனியன் மனித உரிமை விருது!

பாகிஸ்தானைச் சேர்ந்த சிறுமி மலாலா யூசுஃப் ஸாய்க்கு ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் உயரிய விருதானசக்காரோவ் மனித உரிமை விருதுவியாழக்கிழமை வழங்கப்பட்டது.
 
இது குறித்து ஐரோப்பிய கூட்டமைப்பின் தலைவர் மார்ட்டின் சுல்ஸ் கூறுகையில், ‘மலாலா யூசஃப்ஸாய் போன்றவர்களின் கையில்தான் இளைஞர்களின் எதிர்காலம் உள்ளது என்பதை உலகிற்கு தெரிவிப்பதற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு விருதை வழங்குவதில் ஐரோப்பிய யூனியன் பெருமை அடைகிறது.’ என்றார்.
 
ஒவ்வொரு ஆண்டும் ஆன்ட்ரேய் சக்காரோவ் நினைவாக இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. விருதின் மதிப்பு 50,000 யூரோ (ரூ.39,90,519) ஆகும். இதற்கு முன்னதாக சக்காரோவ் விருதினை தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா, முன்னாள் .நா. பொதுச் செயலர் கோபி அன்னன் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூகி ஆகியோர் பெற்றுள்ளனர்.

No comments:

Post a Comment