முத்துப்பேட்டை டுடே! தங்களை அன்புடன் வரவேற்கிறது, உங்களின் கருத்துக்களும், ஆலோசனைகளும் இல்லாமல் இப்பணி சாத்தியம் இல்லை என்று "MTEAM" ஆழமாக நம்புகிறது. எனவே உங்களுடைய பங்களிப்பையும், ஆதரவையும் வரவேற்கின்றோம். செய்திகள் மற்றும் கட்டுரைகள் சம்மந்தமாக தொடர்பு கொள்ள teammtoday@gmail.com என்ற மின்அஞ்சலுக்கு தங்களின் அஞ்சல்களை அனுப்புமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

Thursday, 31 October 2013

முத்துப்பேட்டையில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க கோரி தமுமுக மனு!

முத்துப்பேட்டையில் அதிகமாக டெங்கு காய்சல் பரவிகொண்டிருக்கிறது. இதனால் மக்கள் பெரும் பீதியில் உள்ளனர். இது குறித்து டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி கடந்த 28-10-2013 அன்று  முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் தமுமுக சார்பாக மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவில் கீழ்கண்டவாறு கூறப்பட்டுள்ளன.


முத்துப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சமீபகாலமாக டெங்கு காய்ச்சல் பரவிக்கொண்டிருக்கிறது. எனவே தினந்தோறும் அனைத்து வார்டுகளிலும் உள்ள குப்பைகளை தேங்க விடாமல் உடனியாக அப்புறப்படுத்தவும், கழிவு நீர் காழ்வாய்களை உடனடியாக சுத்தம் செய்து மருந்து அடித்தும், வடிகால்களுக்கு மூடி அமைத்தும் மற்றும் கொசுக்களை கட்டுபடுத்து அதற்கான கொசு மருந்து அடித்தும் தொடர்ந்து டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க பேரூராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து பொது மக்களை நோயிலிருந்து பாதுகாக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். 

No comments:

Post a Comment