கர்நாடகாவில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட நிர்வாகி தனது ஆதரவாளர்களுடன், பெண் ஒருவரை நிர்வாணமாக நடனம் ஆட வைத்து ரசித்த வீடியோ காட்சி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாரதிய ஜனதா கட்சியின் பிதார் மாவட்ட செயலாளர், பாபுவால் உள்ளிட்டோர் நடனத்தை கண்டு ரசிக்கும் காட்சி வீடியோவில் பதிவாகியுள்ளது. நடனம் ஆடிய அந்த பெண், விருந்து நிகழ்ச்சிக்காக மகாராஷ்ட்டிராவில் இருந்து அழைத்து வரப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நடனத்தை பெண்களும் பார்த்து ரசித்த கொடுமை அனைவரையும் வேதனை அடையச் செய்துள்ளது. பெண்ணை நிர்வாணமாக நடனமாட வைத்த பாரதிய ஜனதா நிர்வாகி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு கட்சியினரும் வலியுறுத்தியுள்ளனர்.

No comments:
Post a Comment