முத்துப்பேட்டை டுடே! தங்களை அன்புடன் வரவேற்கிறது, உங்களின் கருத்துக்களும், ஆலோசனைகளும் இல்லாமல் இப்பணி சாத்தியம் இல்லை என்று "MTEAM" ஆழமாக நம்புகிறது. எனவே உங்களுடைய பங்களிப்பையும், ஆதரவையும் வரவேற்கின்றோம். செய்திகள் மற்றும் கட்டுரைகள் சம்மந்தமாக தொடர்பு கொள்ள teammtoday@gmail.com என்ற மின்அஞ்சலுக்கு தங்களின் அஞ்சல்களை அனுப்புமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

Wednesday, 2 October 2013

முஸாபர்நகர் : கலவரத்துக்கு நடுவில் கூட்டு பாலியல் வன்கொடுமை!

த்தர பிரதேச மாநிலம் முஸஃபர்நகரில் சங்க் பரிவார்களுடன் இணைந்து ஜாட் இனத்தவர்கள் முஸ்லிம்கள் மீது நடத்திய கலவரத்தின் போது தாங்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறி 3 பெண்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.


முஸஃபர்நகரின் புகானா கிராமத்தைச் சார்ந்த பெண்கள், தாங்கள் வன்கொடுமைக்கு ஆளானதாகவும், தங்களது வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டதாகவும் போலீசில் புகார் அளித்துள்ளனர். இவர்களுடைய புகாரை ஏற்றுக்கொண்ட போலீஸ் 17 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கியுள்ளது.

கலவரத்தில் 62 பேர் கொல்லப்பட்டார்கள் என்பது அதிகாரப்பூர்வ புள்ளிவிபரமாகும். பலர் காணாமல் போயுள்ளனர். 40 ஆயிரம் பேர் வீடுகளை இழந்துள்ளனர்.

No comments:

Post a Comment