ஆந்திரா: தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்று வரும் முழு அடைப்பு போராட்டத்தால் ஆந்திர மாநிலத்தில் பல நகரங்கள் வெறிச்சோடி கிடக்கின்றன. இந்த போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
தனித்தெலங்கானா மாநிலத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. இதற்கு, ஆந்திராவின் 13 மாவட்டங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திருப்பதி, சித்தூர், விசாகப்பட்டினம் உள்ளிட்ட பல நகரங்களில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
பல இடங்களில் ஆர்பாட்டக்காரர்கள் வாகனங்களுக்கு தீ வைத்தனர். விஜயவாடா உள்ளிட்ட பல இடங்களில் காங்கிரஸ்காரர்களுக்கு சொந்தமான பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனைகளை ஆர்பாட்டக்காரர்கள் சூறையாடினார்கள். இதனால் போராட்டம் நடைபெறும் அனைத்து பகுதிகளிலும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.
முழு அடைப்பு போராட்டத்தால் விசாகப்பட்டினத்தில் அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை. சென்னை, கொல்கத்தா சாலையில் எலமஞ்சிலி என்ற இடத்தில் போக்குவரது முடங்கியுள்ளது. முழு அடைப்பு போராட்டத்தால் திருப்பதி, திருமலை பேருந்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment