திருவாரூர் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் நடராசன் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் திருத்துறைப் பூண்டி, மன்னார்குடி, திருவாரூர் மற்றும் நன்னிலம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.
பின்னர் நிருபர்களிடம் கலெக்டர் நடராசன் கூறியதாவது:–
10.1.2013 அன்று வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின் படி திருவாரூர் மாவட்டத்தில் 4,48,920 ஆண் வாக்காளர்களும், 4,42,764 பெண் வாக்காளர்களும், 7திருநங்கை வாக்காளர்களும் ஆக மொத்தம் 8,91,691 வாக்காளர்கள் இருந்தனர். 11.1.2013 முதல் 30.9.2013 வரை 2,950 ஆண் வாக்காளர்களும், 2,148 பெண் வாக்காளர்களும் சேர்த்து மொத்தம் 5,098 வாக்காளர்கள் புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்ந்தனர். பெயர் நீக்கம் கேட்டு விண்ணப்பித்ததன் அடிப்படையிலும், வீடு, வீடாக அலுவலர்கள் சென்று வாக்காளர்பட்டியலில் சரிபார்ப்பு பணிகளை மேற்கொண்டதன் அடிப்படையிலும் 1,511 ஆண் வாக்காளர்களும், 2,493பெண் வாக்காளர்களும் மொத்தம் 4,004 வாக்காளர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டது.
அதனடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலின்படி திருவாரூர் மாவட்டத்தில் தற்போது மொத்தம் 8,92,785 வாக்காளர்கள் உள்ளனர்.இதில் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் 2,07,299 வாக்காளர்களும், மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் 2,19,679 வாக்காளர்களும், திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் 2,29,133 வாக்காளர்களும், நன்னிலம் சட்டமன்ற தொகுதியில் 2,36,674 வாக்காளர்களும் சேர்த்து மொத்தம் 8,92,785 வாக்காளர்கள், வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்று உள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியலில் 18 வயது முதல் 19 வயதுடைய 5,938 வாக்காளர்களும், 20 வயது முதல் 24 வயதுடைய 68,504 வாக்காளர்களும், இடம் பெற்றுள்ளனர்.
வரைவு வாக்காளர் பட்டியல் திருவாரூர் மற்றும் மன்னார்குடி வருவாய் கோட்ட அலுவலகங்கள், அனைத்து தாசில்தார், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் வாக்குச்சாவடி மையங்களில் 1.10.2013 முதல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும். மேலும் 2.10.2013 மற்றும் 5.10.2013 ஆகிய நாட்களில் நடைபெற உள்ள சிறப்பு கிராம சபைக் கூட்டங்களிலும் வாக்காளர் பட்டியல் பார்வைக்கு பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும்இவ்வாறு அவர் கூறினார்.இந்த நிகழ்ச்சியில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், மாவட்ட வருவாய் அலுவலர் மணிமாறன், கோட்டாட் சியர்கள் பரமசிவம், சுப்பு, கலெக்டரின் நேர்முக உதவியாளர் மாலா, தேர்தல் பிரிவு தாசில்தார் காமராஜ், உட்பட தாசில்தார்கள், தேர்தல் துணை தாசில்தார்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment