தீவிரவாதி என்ற குற்றச்சாட்டில் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை கைது செய்து கொடுமை படுத்துவதாக நாடெங்கும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனையொட்டி அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து அறிக்கை அனுப்புமாறு உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே மாநில முதலைச்சர்களுக்கு கடிதம் எழுதினார்.
இது குறித்து பாஜக தலைவர் வெங்கய்யா நாயுடு செய்தியாளார்களிடம் பேசும் போது, "உள்துறை அமைச்சர் நாட்டுக்கு மந்திரியா? அல்லது ஒரு சமுதாயத்திற்கு மந்திரியா? இது பொறுப்பற்றதான செயல் மட்டுமல்ல முட்டாள்தனமான செயலும் ஆகும்.
ஷிண்டேவின் உத்தரவு அரசியலமைப்பு சட்டத்திற்கும், மதசார்பின்மைக்கும் எதிரானதாகும். உள்துறை அமைச்சரின் உத்தரவை குப்பையில் வீசும் படி பாஜக மாநில முதலமைச்சர்களை நான் கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறினார்.

No comments:
Post a Comment