முத்துப்பேட்டை டுடே! தங்களை அன்புடன் வரவேற்கிறது, உங்களின் கருத்துக்களும், ஆலோசனைகளும் இல்லாமல் இப்பணி சாத்தியம் இல்லை என்று "MTEAM" ஆழமாக நம்புகிறது. எனவே உங்களுடைய பங்களிப்பையும், ஆதரவையும் வரவேற்கின்றோம். செய்திகள் மற்றும் கட்டுரைகள் சம்மந்தமாக தொடர்பு கொள்ள teammtoday@gmail.com என்ற மின்அஞ்சலுக்கு தங்களின் அஞ்சல்களை அனுப்புமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

Monday, 11 November 2013

இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர்! -மௌலானா அபுல்கலாம் ஆசாத் பிறந்த தினம் இன்று!

ந்திய வரலாற்றில் மறைக்க முடியாதமறுக்க முடியாத பங்காளரான மௌலானா அபுல் கலாம் முகியுத்தின் அகமது என்பவர் 11 நவம்பர் 1888 அன்று பிறந்தார். இவர்  இந்திய விடுதலை இயக்கத்தின் மூத்த அரசியல் தலைவரும்இஸ்லாமிய  அறிஞரும் ஆவார்.

சமய அடிப்படையிலான இந்தியப் பிரிவினையைஎதிர்த்து இந்து- முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்திய  தலைவர்களில் முதன்மையானவர். இந்தியா விடுதலையடைந்த பிறகு அமைந்த முதல் இந்திய அரசில் கல்வி அமைச்சராகப் பணியாற்றியவர். 22 பிப்ரவரி 1958 ல் மறைந்தார்.1992ஆம் ஆண்டு இவருக்கு இந்தியாவின் உயரிய குடிமை விருதான பாரத ரத்னா வழங்கப்பட்டது.

ஆனால் இவர்க்கு மற்றொரு பெயரும் உண்டு.அந்த பெயர் தான் வரலாற்றில் நிலைத்தும் நின்றது. அதுதான்  மௌலானா அபுல்கலாம் ஆசாத். ஆசாத் (விடுதலை) என்பது இவர் வைத்துக்கொண்ட புனைப்பெயராகும்.

இன்று இந்தியாவில் அனைத்து சமூகத்துக்கும் கல்வி கிடைக்க கல்வித்துறையில்  சரியான அடித்தளமிட்டார். நாட்டு மக்களின் மீது அன்பு கொண்டுஅவர்களின் கல்வி அறிவை உயர்த்திட கல்வித்துறையில்  இவராற்றிய பணியை நினைவுகூறும் வகையில் இவரது பிறந்த நாள் தேசிய கல்வி நாளாகக் கொண்டாடப்படுகிறது. புதுதில்லியில் உள்ள மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகள் மௌலானா ஆசாத் என்ற இவரது பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றன.

No comments:

Post a Comment