முத்துப்பேட்டையை அடுத்த தம்பிக்கோட்டை ஐயப்பன் கோவில் அருகே உமா தேவி மினி பஸ் எதிரே வந்த நிலா சீ புட்ஸ் லாரியுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
நேற்று இரவு உமா தேவி மினி பஸ் (TN 69 E 7959) FC வேலை முடித்துவிட்டு வந்து கொண்டிருந்த பொழுது நாகப்பட்டினத்திலிருந்து வந்துகொண்டிருந்த நிலா சீ புட்ஸ் லாரியுடன் (TN69 C 7574) தம்பிக்கோட்டை ஐயப்பன் கோவில் அருகே நேருக்கு நேர் மோதியது. இதில் பஸ்சின் ஓட்டுனர் பலத்த காயத்தோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனால் நேற்று இரவு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து முத்துப்பேட்டை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


No comments:
Post a Comment