நவம்பர் 10ந்தேதியை பயங்கரவாத எதிர்ப்பு தினமாக அறிவித்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தமிழகம் முழுவதும் அதன் கிளை அமைப்புகளின் சார்பில் மாபெரும் ரத்த தான முகாம்களுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தது.இதன் படி,இன்று தமிழகம் முழுவதும் ரத்த தான முகாம்கள் எழுச்சியுடன் நடைபெற்றன.
ஒரு மனிதனை வாழ வைத்தவர் ஒட்டு மொத்த மனித குலத்தையும் வாழவைத்தவர் போலாவார் என்ற திருக்குரானின் போதனையை ஏற்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத் பல வருடங்களாக தொடர்ந்து ரத்த தான முகாம்களை அரசு மருத்துவ மனைகள்,தனியார் மருத்துவ மனைகள் மற்றும் ரத்த வங்கிகளுடன் இணைந்து ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது.
தன்னார்வல குருதிக் கொடையாளர்கள் நூற்றுக்கணக்கானோர் மிக ஆர்வத்துடன் இந்த முகாம்களில் பங்கேற்று ரத்த தானம் செய்தனர்.அரசு மருத்துவ மனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் வாகன விபத்துக்கள்,பிரசவம்,பயங்கரவாத தாக்குதல்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சைகளின் போது அதிக அளவில் ரத்தம் தேவைப்படுகிறது.நோயாளிகள் பல நேரங்களில் உதிரம் கேட்டு அலையவேண்டிய நிலையும் ஏற்படுகிறது.இவற்றை கவனத்தி கொண்டும், பயங்கரவாதத்தை வேரோடு ஒழித்து அமைதியை வலியுறுத்தும் வகையிலும்,மனித நேயத்தை ஊக்கப்படுத்தும் வகையிலும் இன்று இந்த ரத்த தான முகாம்கள் நடை பெற்றன.
சென்னையில் பல இடங்களில் நடைபெற்ற ரத்த தான முகாம்களை இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் எஸ்.எம்.பாக்கருடன் மாநில நிர்வாகிகளான முஹம்மது முனீர்,செய்யது இக்பால்,அபு பைசல்,முஹம்மது ஷிப்லி,முஹைதீன் மற்றும் சென்னை மாவட்ட நிர்வாகிகள் பார்வையிட்டனர்.


No comments:
Post a Comment