இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துக்கொள்ள கூடாது என வலியுறுத்தி திருவாரூரில் இன்று மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் ரயில் மறியல் நடைபெற்றது.
மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி தலைமையில் நடைபெற்ற இந்த மறியலில் மமக அமைப்பு செயலாளர் ராவுத்தர்ஷா, மனிதநேய வணிகர் சங்கச் (MVS) மாநில செயலாளர் கலந்தர் மாவட்டத் தலைவர் ஹலிலூர் ரஹ்மான், மாவட்ட செயலாளர் கூத்தாநல்லூர் சீனி ஜெகபர் உட்பட 200 பேர் கலந்துக்கொண்டு கைதாகி பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

No comments:
Post a Comment