முத்துப்பேட்டை டுடே! தங்களை அன்புடன் வரவேற்கிறது, உங்களின் கருத்துக்களும், ஆலோசனைகளும் இல்லாமல் இப்பணி சாத்தியம் இல்லை என்று "MTEAM" ஆழமாக நம்புகிறது. எனவே உங்களுடைய பங்களிப்பையும், ஆதரவையும் வரவேற்கின்றோம். செய்திகள் மற்றும் கட்டுரைகள் சம்மந்தமாக தொடர்பு கொள்ள teammtoday@gmail.com என்ற மின்அஞ்சலுக்கு தங்களின் அஞ்சல்களை அனுப்புமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

Friday, 8 November 2013

இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக்கூடாது என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்! - நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட்!

விடுதலைப் புலிகளின் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளாராக பணிபுரிந்த இசைப்பிரியா இறந்து கிடந்தது போன்ற செய்தியை 2010ல் வெளியிட்டது சேனல்-4 தொலைக்காட்சி நிர்வாணமாக இறந்துகிடந்த இசைப்பிரியா பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி இருக்கலாம் என்று கூறப்பட்டது. இப்போது சேனல்4 தொலைக்காட்சி வெளியிட்டிருக்கும் காட்சிகள் இசைப்பிரியாவை இலங்கை ராணுவத்தினர் உயிருடன் பிடித்திருப்பதாக காட்டுகிறது. 

அரை நிர்வாணமாக இருக்கும் இசைப்பிரியாவின் மீது வெள்ளைத் துணியைப் போர்த்தி அழைத்துச் செல்லும்போது அவரை பிரபாகரனின் மகள் என்று சொல்கிறார்கள் ராணுவத்தினர், அதை இசைப்பிரியா அழுதுகொண்டே மறுக்கிறார். 28 வயது இசைப்பிரியா பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு பிறகு கொல்லப்பட்டிருப்பதை இந்தக் காட்சிகள் உறுதிபடுத்துகிறது. தமிழ்ப்பெண் என்ற காரணத்திற்காக பிணைக்கைதியாக இருந்த இசைப்பிரியாவை இவ்வளவு சித்திரவதைகள் செய்திருக்கிறது இலங்கை ராணுவம்,பல்லாயிரக்கணக்கான தமிழர்களை காவு வாங்கிய ராஜபக்சே அரசு செய்து வந்த, செய்து கொண்டிருக்கும் அக்கிரமங்களுக்கு சாட்சியாக ஒன்று, இரண்டு ஆதாரங்கள் வெளியாகி வருகிறது. மறைக்கப்பட்ட உண்மைகள், சித்ரவதைகள் இன்னும் எத்தனை உள்ளதோ தெரியவில்லை?
பெண்கள்,குழந்தைகள்,முதியவர்கள் என்று கூட இறக்கம் காட்டாமல் கொன்று புதைத்த ராஜபக்சே ஆட்சி நடத்தும் இலங்கையில் இம்மாதம் காமன்வெல்த் மாநாடு நடக்கவிருக்கிறது. இவ்வளவு தமிழர்களை கொன்று காவு வாங்கிய ராஜபக்சேவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணித்து தன் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும்.
மேலும் காமன்வெல்த் அமைப்பிலிருந்தே இலங்கையை நீக்க வேண்டும். இலங்கையின் மீது போர்க்குற்ற விசாரணை நடத்தும் வகையில் மனித உரிமை ஆணையத்திடம் இந்தியா முறையிட வேண்டும் என்றும் நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் கேட்டுக்கொள்கிறது.
உலகில் எந்த மூலையில் பெண்கள் குழந்தைகளுக்கெதிரான வன்முறைகள் நடந்தாலும் நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் அதை வண்மையாக கண்டித்துக் கொண்டிருக்கிறது. அந்த அடிப்படையிலே இசைப்பிரியாவுக்கு இலங்கை ராணுவம் நடத்திய இந்த கொடுமையை நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் கண்டிக்கிறது. மேலும் மேலே கூறப்பட்ட கோரிக்கைகளை இந்திய அரசிற்கு வலியுறுத்தக்கூடிய வகையில் வருகிற 9-ம் தேதி மாலை 3 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் சார்பாக ஆர்பாட்டம் நடத்த உள்ளோம்.
இப்படிக்கு
A . பாத்திமா ஆலிமா,
மாநில தலைவர்,
நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட்

No comments:

Post a Comment