முத்துப்பேட்டை டுடே! தங்களை அன்புடன் வரவேற்கிறது, உங்களின் கருத்துக்களும், ஆலோசனைகளும் இல்லாமல் இப்பணி சாத்தியம் இல்லை என்று "MTEAM" ஆழமாக நம்புகிறது. எனவே உங்களுடைய பங்களிப்பையும், ஆதரவையும் வரவேற்கின்றோம். செய்திகள் மற்றும் கட்டுரைகள் சம்மந்தமாக தொடர்பு கொள்ள teammtoday@gmail.com என்ற மின்அஞ்சலுக்கு தங்களின் அஞ்சல்களை அனுப்புமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

Monday, 11 November 2013

முத்துபேட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

லங்கையில் நடைபெறும் காமன் வெல்த் மாநாட்டை இந்திய புறக்கணிக்க கோரி மதிய அரசை கண்டித்து முத்துபேட்டையில்  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

முத்துபேட்டை பழைய பேருந்து நிலையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்  மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சந்திரசேகர் ஆசாத் முத்துபேட்டை ஒன்றிய செயலாளர் முருகையன், ஒன்றியகுழு துணை பெருந்தலைவர் தட்சிணாமூர்த்தி தலைமையில் இலங்கையில் நடைபெறும் காமன் வெல்த் மாநாட்டை இந்திய புறக்கணிக்க கோரி மதிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
 
இலங்கையில் நடை பெரும் காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கு பெற கூடாது .

காமன் வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை வெளியேற்ற வேண்டும் .

இலங்கையில் நடைபெற்ற போற்குற்றங்களையும் மனித உரிமை மீறல்களையும் சர்வதேச விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கையில் தொடர்ந்து நடைபெறும் இன அழிப்பு பயங்கரவாத நடவடிக்கைகளை கைவிட உலக நாடுகளின் ஆதரவை இந்திய கோர வேண்டும்

ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

No comments:

Post a Comment