முத்துப்பேட்டை டுடே! தங்களை அன்புடன் வரவேற்கிறது, உங்களின் கருத்துக்களும், ஆலோசனைகளும் இல்லாமல் இப்பணி சாத்தியம் இல்லை என்று "MTEAM" ஆழமாக நம்புகிறது. எனவே உங்களுடைய பங்களிப்பையும், ஆதரவையும் வரவேற்கின்றோம். செய்திகள் மற்றும் கட்டுரைகள் சம்மந்தமாக தொடர்பு கொள்ள teammtoday@gmail.com என்ற மின்அஞ்சலுக்கு தங்களின் அஞ்சல்களை அனுப்புமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

Thursday, 31 October 2013

மோடியும் அமெரிக்க விசாவும்!


கீரதப் பிரயத்தனம் என்பார்களே அதுபோல  மோடியின் விசுவாசிகள் பலரும் பலவிதத்தில் முயற்சித்தும்  மோடிக்கு அமெரிக்க விசா கிடைத்த பாடில்லை. எப்படியாவது அமெரிக்க விசாவைப் பெற்று ஒருமுறையாவது அங்கே சென்று வந்துவிட்டால் மோடியை சர்வதேச தலைவராக தலையில் தூக்கி வைத்து கொண்டாட சங்க பரிவார அமைப்புகள் துடித்துக் கொண்டிருக்கின்றன.

ராபிஆ சின்னம் பொறித்த ஆடை அணிந்ததால் எகிப்து குங்ஃபூ வீரரின் பதக்கம் பறிக்கப்பட்டது!

கிப்தின் ஜனநாயக போராட்டத்தை ஆதரிக்கும் ராபிஆ சின்னம் பொறித்த டீசர்ட் அணிந்த எகிப்தின் குங்ஃபூ வீரருக்கு கிடைத்த தங்கப் பதக்கத்தை சர்வாதிகார ராணுவ அரசு பறித்துள்ளது. ரஷ்யாவில் நடந்த குங்ஃபூ சாம்பியன்ஷிப் போட்டியில், எகிப்தின் ஜனநாயக போராட்டத்தை ஆதரிக்கும் ராபிஆ சின்னம் பொறித்த டீ சர்ட்டை அணிந்து அதன் மீது தங்கப்பதக்கத்தை அணிந்திருந்த குங்ஃபூ வீரர் முஹம்மது யூசுஃபிற்கு கிடைத்த பதக்கத்தை தான்  சர்வாதிகார ராணுவ அரசு பறித்துள்ளது.

திருவாரூர் மாவட்ட ஆட்சியரை கண்டித்து ஆர்ப்பாட்டம்! -தவ்ஹீத் ஜமாத்

முத்துப்பேட்டை ஆசாத் நகரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் அலுவலகம் கட்டுமான பணி நடைபெற்று வந்தது. இதனை சமீபத்தில் மாவட்ட ஆட்சியர் தடை வித்தித்து உத்தரவு பிறப்பித்தார். இதனால் பணிகள் தடைபெற்று நின்றது.

முத்துப்பேட்டையில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க கோரி தமுமுக மனு!

முத்துப்பேட்டையில் அதிகமாக டெங்கு காய்சல் பரவிகொண்டிருக்கிறது. இதனால் மக்கள் பெரும் பீதியில் உள்ளனர். இது குறித்து டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி கடந்த 28-10-2013 அன்று  முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் தமுமுக சார்பாக மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவில் கீழ்கண்டவாறு கூறப்பட்டுள்ளன.

ஆப்பிள் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் தீமைகள்!!!


டலுக்கு மிகுந்த ஆரோக்கியத்தை தரும் பழங்களில் முதன்மையானது தான் ஆப்பிள். ஏனெனில் ஆப்பிள் பழத்தில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. மேலும் மருத்துவர்கள் கூட தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால், நோய்களில் இருந்து விலகி இருக்கலாம் என்று சொல்வார்கள். ஆனால் அத்தகைய ஆப்பிளை ஜூஸ் போட்டு குடித்தால், அது உடலுக்கு ஆரோக்கியத்திற்கு பதிலாக தீமையைத் தான் விளைவிக்கும். 

Saturday, 26 October 2013

இணைந்து பணியாற்ற அழைக்கின்றோம்!


ன்பார்ந்த நண்பர்களே! உங்களின் கருத்துக்களும், ஆலோசனைகளும் இல்லாமல் இப்பணி சாத்தியம் இல்லை என்று "MTEAM" ஆழமாக நம்புகிறது. எங்களால் முடிந்தவரை செய்திகளை வெளியிடுகின்றோம். இன்னும் இதனை அதிகப்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. எனவே உங்களுடைய பங்களிப்பையும், ஆதரவையும் வரவேற்கின்றோம். 

இராணுவ ஆட்சிக்கு விரைவில் முடிவு!: முஹம்மது முர்ஸி

கெய்ரோ: எகிப்தில் இராணுவ ஆட்சிக்கு விரைவில் முடிவு ஏற்படும் என்று சதிப் புரட்சியால் வெளியேற்றப்பட்ட அந்நாட்டின் முதல் ஜனநாயக அதிபர் முஹம்மது முர்ஸி கூறியுள்ளார்.

திரிசூல நாடகம் தொடர்பாக அனைத்து முஹல்லா மற்றும் இயக்கங்களின் கூட்டம்!

முத்துப்பேட்டை: கடந்த சில நாட்களுக்கு முன்பு முத்துப்பேட்டை தர்கா அருகே ஜீவானந்தம் என்பவறின் நிலத்தில் திரிசூலத்தை நட்டுவிட்டு தானாக முளைத்ததாக கூறி அமைதியை சீர்குலைக்கும் விதமாக நாடகமாடியது தொடர்பாக முத்துப்பேட்டை அனைத்து முஹல்லா மற்றும் அணைத்து இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டம் நேற்று மாலை அரபு சாஹிப் பள்ளி மதரசாவில் நடைபெற்றது.

Friday, 25 October 2013

முஹம்மத் இத்ரிஸ்! -இவரால் பெருமைபடுகிறது முத்துப்பேட்டை!

முத்துப்பேட்டையில் பிறந்து பஹ்ரைனில் வாழ்ந்து வரும் முஹம்மத் இத்ரிஸ் ஓட்டப்பந்தைய வீரர் இன்று உலகம் முழுவதும் தனது வெற்றிப்பயணத்தை தொடர்ந்து சாதனை படைத்து வருகிறார்.

பா.ஜா.க.வுக்கு தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவா?

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதாக பா.ஜ.க. வாக்குறுதி அளித்தால் பா.ஜ.க.வை தவ்ஹீத் ஜமாஅத் ஆதரிக்கும் என்ற கருத்து தவ்ஹீத் ஜமாஅத்தின் கருத்து அல்ல. பா.ஜ.க.வுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே இடஒதுக்கீடு அல்லாத அதை விட முக்கியமான பிரச்சினைகள் உள்ளன.

முத்துப்பேட்டையில் எந்நேரமும் பரபரப்பை ஏற்படுத்துவது பாசிசவாதிகளின் திட்டம் ?

முத்துப்பேட்டையில் அன்றாடம் எதோ ஒரு வகையில் ஒரு சலசலப்பை ஏற்படுத்துவது வாடிக்கையாகிவிட்டது. அந்த வகையில் கடந்த 20/10/13 அன்று தர்காவிற்கு எதிரில் ஒருவருக்கு சொந்தமான இடத்தில் திரிசூலம் முளைத்ததாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினர். 

திரிசூல நாடகம்: பாக்கர் அலியை சந்தித்தார் அபூபக்கர் சித்திக்!

முத்துப்பேட்டை தர்கா அருகில் ஜீவானந்தம் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கடந்த 20.10.2013 அன்று திரிசூலத்தை நட்டுவிட்டு தானாக முளைத்ததாக நாடகம் அரங்கேற்றப்பட்டது தொடர்பாக உண்மை நிலையை அறிந்துகொள்வதற்காக பாப்புலர் ஃபிராண்ட் -ன் திருவாரூர் மாவட்ட தலைவர் அபூபக்கர் சித்திக் அவர்கள் முத்துப்பேட்டை தர்கா கமிட்டி தலைவர் பாக்கர் அலியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

Wednesday, 23 October 2013

பாபரி மஸ்ஜித்: அத்வானியை விடுவித்ததற்கு எதிரான மனு மீது டிசம்பரில் விசாரணை!

பாபரி மஸ்ஜித் இடிப்பு விவகாரத்தில் சதிச் செயலில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கிலிருந்து அத்வானி உள்ளிட்ட 20 பேரை விடுவித்ததை எதிர்த்து சி.பி.ஐ. தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு  வரும் டிசம்பர் 12ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

கண் சிகிட்சைப்பெற அப்துல் நாஸர் மஃதனிக்கு உச்சநீதிமன்றம் அனுமதி!

பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள கேரள மாநில பி.டி.பி கட்சி தலைவர் அப்துல் நாஸர் மதானிக்கு கண் சிகிட்சை பெற உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

Tuesday, 22 October 2013

நெல்பேட்டை முஸ்லிம்களின் உண்மை நிலை! (விகடன்)

காவல் துறையின் பதிவேட்டில் இந்தியாவையே அச்சுறுத்தும் பயங்கரவாதிகள் நடமாடும் டெரர் பூமியாக அடையாளம் காட்டப்படுவது இந்த நெல்பேட்டை போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக் ஆகியோர் இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள்தான்!

திரைப்படமானது சட்டப் போராளி ஷாஹித் ஆஸ்மியின் போராட்ட வாழ்க்கை!

2010-ஆம் ஆண்டு ஹிந்துத்துவ பாசிஸ்டுகளால் படுகொலை செய்யப்பட்ட சட்டப் போராளி ஷாஹித் ஆஸ்மியின் போராட்ட வாழ்க்கையை சித்தரிக்கும் திரைப்படம் ‘ஷாஹித்’ தியேட்டர்களில் வெளியாகியுள்ளது. தனக்கு சரியென தோன்றியதற்காக வாழ்க்கையை அர்ப்பணித்ததற்காக ஷாஹித் தனது உயிரையே பலி கொடுக்க நேர்ந்தது. கலப்படம் ஏதுமில்லாமல் ஹன்ஸல் மேத்தா ஷாஹிதின் கதையை கூறுகிறார்.

Monday, 21 October 2013

முத்துப்பேட்டையில் கலவரத்தை ஏற்படுத்த பா.ஜ.க.வினர் சதி?

முத்துப்பேட்டை தர்காவுக்கு எதிர்புறம் இருக்கும் பள்ளிவாசலுக்கு  பின்புறம் உள்ள குளத்தின் மேல் கரையில் பட்டாமணியார் ஜீவானந்தத்திற்கு சொந்தமான இடத்தில் நேற்று  (20.10.13) பகல் 3 மணியளவில் பூமி அதிர்ந்து சூலம் வெளிப்பட்டதாக பாண்டியன் என்கிற சேகர் (மனநலம் பாதிக்கப்பட்டவர்) பரபரப்பை ஏற்படுத்தினார். 

Thursday, 17 October 2013

உலகம் முழுவதும் வாழும் முத்துப்பேட்டையர்களின் தியாக திருநாள் கொண்டாட்டம் ஒரு பார்வை! (புகைப்பட தொகுப்பு)

முத்துப்பேட்டையில் பரபரப்பு! குடிபோதையில் ஹோட்டல் ஊழியரை தாக்கியவர் கைது!


முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகம் எதிரே உள்ள நியூ ஹோட்டலில் நேற்று முன்தினம் (15/10/13) இரவு 11 மணி அளவில் கோவிலூரை சேர்ந்த பிரபு மற்றும் அவரது கூட்டாளிகள் இரண்டு பேர் ஹோட்டல் ஊழியரை தாக்கி பிரச்சனை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Monday, 14 October 2013

மோடி பிரதமராகி விட்டால் இந்தியா வல்லரசாகி விடும்!

ரேந்திர மோடி 18.10.2013 அன்று சென்னை வருகிறார்.  அருண் ஷோரி எழுதிய ஒரு நூலை வெளியிடவிருக்கிறார். நிகழ்ச்சியில் சோ, அருண் ஷோரி ஆகியோர் பங்கேற்கவிருப்பதாக செய்திகள் வெளியாகி இயிருக்கின்றன. 

ஆடிட்டர் ரமேஷ் கொலையும், பின்னணியும்! (ஸ்பெஷல் ரிப்போர்ட்)


பாரதிய ஜனதாவின் மாநில பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் 19.7.2013 அன்று மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இப்படுகொலை யாரால் நடத்தப்பட்டது. எந்த பின்னணியில் நடத்தப்பட்டது என்று விசாரணை நடைபெறுவதற்கு முன்னே இந்துத்துவ ஃபாசிச அமைப்புகள் முஸ்லிம்கள் மீது இப்படுகொலையை திணிக்க முற்பட்டுவருகிறது.

பா.ம.க-வை அரசியல் கட்சிகள் புறக்கணிக்க வேண்டும்! -அ.மார்க்ஸ்

சாதி இருக்கும் வரை சாதி இயக்கம் இருந்துதான் ஆகும் என்கிறார் ராமதாஸ். 45 சாதி இயக்கங்களின் தலை வர்களைத் திரட்டித் தொகுத்த மகிழ்ச்சியில், என் உடம்பில் தெம்பு வந்துவிட்டது என்கிறார். சாதி ரீதியாகப் பிரச்சினைகளைத் தொகுத்து மத்திய - மாநில அரசுகளிடம் சமர்ப்பிப்போம் என்கிறார். ஆக, தமிழக மக்கள், மக்களின் ஒட்டு மொத்தமான பிரச்சினைகள் என்பதைக் காட்டிலும், தனித்தனிச் சாதிகளின் பிரச்சினை என்கிற அளவில்தான் இனி பேச முடியும் என்பதுதான் அவரது 'அனைத்து சமுதாயப் பேரியக்கம்' முன்வைக்கும் செய்தி.

முஸாஃபர் நகர் கலவரத்தை பெருமையுடன் கொண்டாடும் தொலைபேசி உரையாடல்கள்!

முஸாஃபர் நகர் கலவரத்தில் முஸ்லிம்கள் கொலைச் செய்யப்படுவதையும், அவர்களுடைய வீடுகள் தீக்கிரையாக்கப்படுவதையும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொள்ளும் தொலைபேசி உரையாடல்கள் வெளியாகியுள்ளன. ரிஹாய் மஞ்ச் என்ற அமைப்பும் இந்த தொலைபேசி உரையாடல்களை வெளியிட்டுள்ளது.

மன்னார்குடி: சிறுவர்களால் வந்த விபரீதம்! 6 வீடுகள் எரிந்து நாசம்!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 வீடுகள் எரிந்து சேதமடைந்தன. சிறுவர்கள் பட்டாசு வெடித்து விளையாடிய போது ராக்கெட் வெடி கூரையில் பட்டு பாலு என்பவர் வீட்டில் தீ பற்றி உள்ளது. காற்று பலமாக வீசியதால் அருகில் இருந்த வீடுகளுக்கும் தீ பரவியதாகக் கூறப்படுகிறது. 

ராமர் கோயில் மறுகட்டமைப்பு! -உ.பி. அரசின் கடிதத்தால் சர்ச்சை

யோத்தியில் ராமர் கோயில் கட்டுவது தொடர்பான உத்தரப்பிரதேச அரசின் கடிதத்தால் சர்ச்சை எழுந்துள்ளது. குஜராத் மாநிலம், சோமநாத்தில் பிரமாண்டமான கோயில் கட்டப்பட்டது போல, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது தொடர்பான நாடாளுமன்ற சட்டம் குறித்து விவாதிக்க அக்டோபர் 14-ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது என டி.ஜி.பி உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு உள்துறை செயலர் சர்வேஷ் குமார் மிஸ்ரா அக்டோபர் 9-ஆம் தேதி அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கடிதத்தால் சர்ச்சை எழுந்துள்ளது.

முத்துப்பேட்டையில் இன்று கடையடைப்பு!

முத்துப்பேட்டை குமரன் பஜாரில் உள்ள லக்ஷ்மி ஜுவல்லரி கடை உடைக்கப்பட்டதை கண்டிக்கும் விதமாக இன்று காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை அணைத்து கடைகளையும் அடைக்குமாறு முத்துப்பேட்டை வர்த்தக சங்கம் அறிவித்துள்ளது.

முத்துப்பேட்டை அருகே பயங்கர வெடி மருந்துகள் பறிமுதல்! -சதி செயலுக்காக பதுக்கப்பட்டவையா?

முத்துப்பேட்டையை அடுத்த ஜாம்பவான்ஓடை, வயிரவன்சோலையில்  ஒரு வீட்டில் வெடிமருந்து பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து முத்துப்பேட்டை போலீசார் ஜாம்பவான்ஓடையில் சோதனை நடத்தினர். 

Saturday, 12 October 2013

கரிகாலனுக்கு மனிமண்டபம் என்ற பெயரில் 112 ஆண்டு வரலாற்றுப் பள்ளிவாசலை இடிக்க தமிழக அரசு முயற்சி!


ஞ்சை மாவட்டம் கல்லணைக்கு அருகில், 1901ல் கட்டப்பட்ட 'மக்கா மஸ்ஜிதை' இடிக்கும் முயற்சியில் தமிழக அரசின் பொதுப் பணித்துறை அதிகாரிகள் களம் இறங்கியுள்ளனர்.  திருவெரும்பூரிலிருந்து 15 கி.மீ. தொலைவிலும் திருக்காட்டுப்பள்ளியிலிருந்து 17 கி.மீ. தொலைவிலும் இந்த பள்ளிவாசல் அமைந்துள்ளது. 

பாஜகவுடன் நெருங்கும் ஜெயலலிதா! -மார்க்சிஸ்ட் கட்சி தடுக்க முயற்சி?

பாரதிய ஜனதா கட்சியுடன் அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா நெருங்கி வருவதை தடுக்கும் பணியில் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி ஈடுபட ஆரம்பித்துள்ளது. இதன் முதல் கட்டமாக, டெல்லியில் நடத்தவிருக்கும் மதவாத சக்திகளுக்கு எதிரான கூட்டத்தில் பங்கேற்க அ.தி.மு.க.வுக்கு அந்தக் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

பாலியல் பலாத்கார சாமியார் ஆசாராம் பாபுவின் மகன் கோர்ட்டில் முன்ஜாமின் கேட்டு மனு!


ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ஆசிரமம் நடத்திவரும் ஆசாராம் பாபு (72) மீது கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு உத்தரப்பிரதேச மாணவி பாலியல் புகார் கூறினார். இதையடுத்து ஆசாராம் பாபு கைதுசெய்யப்பட்டு ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அப்போது ஆசாராம் பாபுவின் மகன் நாராயண் சாய் அந்த இளம் பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறினார். 

கல்லூரி முதல்வரை கொன்றது ஏன்? -மாணவர்கள் பரபரப்பு வாக்குமூலம்!


தூத்துக்குடி அருகே பொறியியல் கல்லூரி முதல்வரை படுகொலை செய்தது ஏன்? என்பது பற்றி கைது செய்யப்பட்ட 3 மாணவர்கள் காவல்துறையினரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். தூத்துக்குடி அருகே  வல்லநாட்டில் உள்ள குழந்தை ஏசு பொறியியல் கல்லூரி முதல்வர் சுரேஷை கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட டேனீஸ், பிச்சை கண்ணன், பிரபாகரன் ஆகிய 3 பேரும் போலீசாரிடம் முதலில் அளித்த வாக்குமூலத்தில், "நாங்கள் மூன்று பேரும் பாளையங்கோட்டை மார்க்கெட் அருகே உள்ள ஒரு லாட்ஜில் தங்கியிருந்து தினமும் கல்லூரிக்கு பேருந்தில் சென்று வந்தோம். 

நீடாமங்கலம் கோர்ட்டில் திவாகரன் ஆஜர்!

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ளது ரிஷியூர் ஊராட்சி. இந்த ஊராட்சி மன்றத்தின் முன்னாள் தலைவர் சோம.தமிழார்வன். இவருடைய கார் டிரைவர் பாலசுப்பிர மணியன். பாலசுப்பிர மணியன் மனைவி கஸ்தூரிக்கு சொந்தமான வீடு ரிஷியூரில் கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் மாதம் 28ந் தேதி இடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கஸ்தூரி கடந்த 2012ம் ஆண்டு ஜனவரி 21ந் தேதி திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்தார். அதில் வீடு இடிக்கப்பட்டதற்கு சசிகலாவின் தம்பி திவாகரன் உள்ளிட்டோர் காரணம் என்றும், சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

முத்துப்பேட்டை அருகே சத்துணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வயிற்று வலி!

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே உள்ள ஆலங்காட்டில் ஊராட்சி தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு படிக்கும் மாணவர்களுக்கு மதியம் சத்துணவு வழங்கப்படும். இப்பள்ளியில் நேற்று மதியம் மாணவ– மாணவிகளுக்கு சாம்பார் சாதம், வேக வைத்த முட்டை ஆகியவை வழங்கப்பட்டது. அதனை சாப்பிட்ட மாணவ–மாணவிகளுக்கு கடும் வயிற்று வலி ஏற்பட்டது.

மலாலாவுக்கு ஐரோப்பிய யூனியன் மனித உரிமை விருது!

பாகிஸ்தானைச் சேர்ந்த சிறுமி மலாலா யூசுஃப் ஸாய்க்கு ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் உயரிய விருதானசக்காரோவ் மனித உரிமை விருதுவியாழக்கிழமை வழங்கப்பட்டது.

Thursday, 10 October 2013

பெரம்பலூர்: பிச்சை எடுத்த குழந்தைகளை பள்ளியில் சேர்த்த கலெக்டர்!

பிச்சை எடுத்த 6 குழந்தைகளை மீட்டு உண்டு உறைவிடப் பள்ளியில் ஆட்சியர் சேர்த்துள்ளார். ஆட்சியரின் இந்த மனிதநேய செயலை பெரம்பலூர் மக்கள் பாராட்டி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா வெண்பாவூர் கிராமத்தில் நேற்று முன்தினம் 6 குழந்தைகள் பிச்சை எடுத்துக் கொண்டிருப்பதாக ஆட்சியர் தரேஸ் அகமதுவிற்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, ஆட்சியரின் உத்தரவின்பேரில், மாவட்ட சமூக நல அலுவலர் பேச்சியம்மாள், ஆர்.ஐ. மாயகிருஷ்ணன், வி.ஏ.ஓ. அமிர்தலிங்கம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்பு திட்ட பணியாளர்கள் அடங்கிய குழு வெண்பாவூருக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியுள்ளது.

Wednesday, 9 October 2013

மேற்குலகம் எகிப்தின் சதிப்புரட்சி நிர்வாகத்துக்கு உதவ வேண்டும்! -இஸ்ரேலிய அமைச்சர்

கிப்தின் ஜனாதிபதி முர்ஸியை வீழ்த்தி ஆட்சியைப் பிடித்துள்ள புதிய நிர்வாகத்துக்கு  பொருளாதார உதவிகளை செய்யுமாறு மேற்குலகுக்கு இஸ்ரேலிய பிரதி வெளிஉறவுத்துறை அமைச்சர் ஸெவ் எல்கின் அழைப்பு விடுத்துள்ளார்.

முர்ஸியின் ஆட்சிக்காலத்தில் விவசாய ஏற்றுமதி 43 வீதத்தால் உயர்ந்திருந்தது!

கிப்திய ஜனாதிபதி முர்ஸியின் ஆட்சிக் காலத்தில்  (2012 செப்டம்பர் -2013 ஆகஸ்ட்) எகிப்தின் விவசாய ஏற்றுமதி 43 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டிருந்ததாக எகிப்தின் விவசாயத்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனுடன் இராஜதந்திர உறவை பலப்படுத்தும் ஈரான்!

பிரிட்டனும் ஈரானும் தமது இராஜதந்திர உறவை பரிமாறிக் கொள்வதாகவும், இரு நாடுகளுக்கும் இடையான உறவுகளைப் பலப்படுத்தும் வகையிலான பேச்சுவார்த்ததைகளை ஆரம்பிப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஹமாஸ்-ன் காலித் மிஷ்அல், துருக்கி பிரதமர் ஏர்தூகான் திடீர் சந்திப்பு!

மாஸ்-ன் அரசியல் தலைவர் காலித் மிஷ்அல் நேற்று செவ்வாய்கிழமை (08.10.2013) அங்காராவுக்கு திடீர் விஜயம் மேற்கொண்டு, துருக்கி பிரதமர் ஏர்தூகானை சந்தித்து பலஸ்தீன நல்லிணக்க நடவடிக்கைகள் மற்றும் மத்திய கிழக்கின் நடப்புக்கள் குறித்துப் பேசியுள்ளார்.

முஸஃபர்நகர்: அரசுத் தரப்பில் ஏற்பட்ட தவறு பெரியதொரு கலவரத்திற்கு வழி வகுத்தது! -சிறுபான்மை கமிஷனின் அறிக்கை

புதுடெல்லி: 50க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக்கப்பட்ட உ.பி. மாநிலம் முஸஃபர்நகர் கலவரத்தை கையாண்டதில் மாநில அரசு கடுமையான தவறை இழைத்துள்ளது என்று தேசிய சிறுபான்மை கமிஷனின் அறிக்கை கூறுகிறது.

மயிலாடுதுறையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம்!


நாகை மாவட்டம், அரங்கையில் தவ்ஹீத் ஜமாத்தினரை ஊர் நீக்கம் செய்ததை எதிர்த்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நேற்று 08/10/13  மயிலாடுதுறையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இலங்கையை காமன்வெல்த் கூட்டமைப்பிலிருந்து நீக்க வேண்டும்! -எம்.எச்.ஜவாஹிருல்லா கோரிக்கை!

ராமநாதபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்கள் இலங்கையை காமன்வெல்த் கூட்டமைப்பிலிருந்து நீக்கம் செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். அந்த அறிக்கை பின்வருமாறு:

துப்பாக்கிச்சூடு,கார்க்குண்டு வெடிப்பு,ராக்கெட் தாக்குதல்: எகிப்தில் ராணுவத்தினர் உட்பட 10 பேர் மரணம்!

கெய்ரோ: எகிப்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று ராணுவத்தினரை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டனர்.சூயஸ் கால்வாய் நகரமான இஸ்மாயிலியாவில் ரோந்து சென்றுகொண்டிருந்த ராணுவத்தினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 5 படை வீரர்கள் கொல்லப்பட்டனர்.தெற்கு சினாய் பகுதியில் ராணுவ தலைமயகத்தில் கார்க் குண்டுவெடித்து உயர் அதிகாரிகள் உள்பட 5 பேர் கொல்லப்பட்டனர்.

2016 ல் அரசியலிலிருந்து ஒய்வு! -சோனியா காந்தி


புதுடெல்லி: வருகிற 2016 ஆம் ஆண்டு தனக்கு 70 வயதாகும்போது அரசியலிலிருந்து ஓய்வு பெற காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி விருப்பம் தெரிவித்ததாகவும், இதனைத் தொடர்ந்தே ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

Tuesday, 8 October 2013

இந்தியா, இலங்கை இடையே 2 ஒப்பந்தம்! -சல்மான் குர்ஷித் முன்னிலையில் கையெழுத்து!


த்திய வெளியுறவு துறை மந்திரி சல்மான் குர்ஷித் 2 நாள் பயணமாக இன்று இலங்கை சென்றார். அங்கு, அமைதிப் போரின்போது மரணம் அடைந்த இந்திய வீரர்களின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் இலங்கை வெளியுறவுத்துறை மந்திரி பெரிஸ் மற்றும் முக்கிய தலைவர்களை சந்தித்து முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்தினார். 

உள்துறை அமைச்சரின் உத்தரவை குப்பையில் வீசுங்கள்! -வெங்கையா நாயுடு

தீவிரவாதி என்ற குற்றச்சாட்டில் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை கைது செய்து கொடுமை படுத்துவதாக நாடெங்கும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனையொட்டி அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து அறிக்கை அனுப்புமாறு உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே  மாநில முதலைச்சர்களுக்கு கடிதம் எழுதினார்.

மோடி சிறுபான்மையினருக்கு எதிராக செயல்பட்டதை யாரும் இன்னும் மறக்கவில்லை! -திருநாவுக்கரசர்

ரோட்டிற்கு வருகை தந்த காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்பேட்டியின் போது, "பாஜகவின் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டதற்கு பாஜகவிலே எதிர்ப்பு அதிகரித்துள்ளது. மூத்த தலைவர்களே மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஆர்எஸ்எஸ்-ன் நிர்பந்தம் காரணமாகவே மோடி அறிவிக்கப்பட்டுள்ளார். மோடி இப்போது தான் தேசிய அரசியலுக்கு வந்துள்ளார். எனவே நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் மோடி இருக்கிறார்.
ராகுல் காந்தி தேசிய அரசியலில் இருப்பவர். மக்கள் அவரைத் தான் பிரதமராக கொண்டு வர ஆர்வமாக இருக்கின்றனர். மோடி கூட்டத்திற்கு அதிகமான எண்ணிக்கையில் மக்கள் கூடியதாக பாஜக பெருமை பேசுகிறது. இதே திருச்சியில் சோனியா காந்திக்கு அதனை விட அதிகமாக மக்கள் கூடினர். மோடி சிறுபான்மையினருக்கு எதிரானவர். சிறுபான்மையினருக்கு எதிராக செயல்பட்டதை யாரும் இன்னும் மறக்கவில்லை.

பயணச்சீட்டு இல்லாமலே விமானத்தில் பறந்த சிறுவன்! இதுதான் அமெரிக்காவின் அதிநவீன பாதுகாப்பு?

மெரிக்க நாட்டில்  சிறுவன் ஒருவன் பயணச்சீட்டு இல்லாமல் விமானத்தில் பறந்து சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவிலுள்ளா மின்னபோலிஸ் நகரைச் சார்ந்த  9 வயது சிறுவன் ஒருவன் அந்நகரத்திலுள்ள செயின்ட் பால் விமான நிலையத்திற்கு சென்று, பயணிகளோடு சேர்ந்து விமானம் புறப்படும் இடத்திற்கு சென்று விட்டான்.

திருவாரூரில் நடைபெற்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம்!

மிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முத்துப்பேட்டை கிளை 2ன்  நிர்வாகிகள் கடந்த ஞாயிறு அன்று திருவாரூரில் தக்வா பள்ளியில் நடைபெற்ற மாவட்ட செயற்குழு கூட்டதில் கலந்துகொண்டனர். இச்செயற்குழு  கூட்டத்தில், கடந்த மாதம் மரணம் அடைந்த தஞ்சாவூரை சேர்ந்த ரஜப் அலி அவர்களின் குடும்பத்திற்கு அணைத்து கிளைகளின் சார்பில்  வசூல் செய்யப்பட்ட தொகை (ரூ 87,000) வழங்கபட்டது.