முத்துப்பேட்டை டுடே! தங்களை அன்புடன் வரவேற்கிறது, உங்களின் கருத்துக்களும், ஆலோசனைகளும் இல்லாமல் இப்பணி சாத்தியம் இல்லை என்று "MTEAM" ஆழமாக நம்புகிறது. எனவே உங்களுடைய பங்களிப்பையும், ஆதரவையும் வரவேற்கின்றோம். செய்திகள் மற்றும் கட்டுரைகள் சம்மந்தமாக தொடர்பு கொள்ள teammtoday@gmail.com என்ற மின்அஞ்சலுக்கு தங்களின் அஞ்சல்களை அனுப்புமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

Tuesday, 1 October 2013

இன்று முதல் தன்னுடைய பயணத்தை சிறப்பாக துவங்குகிறது "முத்துப்பேட்டை டுடே"

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்... 

இன்று முதல் தன்னுடைய பயணத்தை சிறப்பாக துவங்குகிறது "முத்துப்பேட்டை டுடே"

மீடியா உலகில் மேற்கத்திய, ஸியோனிஸ மற்றும் பார்ப்பனர்களின் அவதூறுகளும், அட்டகாசமும் அளவுகடந்து சென்று, உலகத்தில் தினமும் பொய்யை கற்பிப்பதில் இன்றைய நாளிதழ்கள் செல்வச் செழிப்பாக திகழ்கின்றன.


முத்துப்பேட்டையில் நடக்கும் அன்றாரட  நடவடிக்கைகளை மக்களுக்கு  உண்மையை உண்மையாய் தெரிவிக்கும் பொருட்டும், நமதூரின் சிறப்பை உலக மக்களுக்கு அறிமுகப்படுத்தவும் மற்றும் பார்ப்பனர்களின் சதிகளை முறியடிக்கும் பொருட்டும் முதற்கட்டமாக தொடங்கப்பட்டதே இந்த Muthupetoday.blogspot.com. 

நமதூரில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளையும் மத வேறுபாடின்றி, இயக்க வேறுபாடின்றி, உலகத்துக்கு தெரியப்படுத்தவும், ஒடுக்கப்பட்டவர்களின் செய்திகள் திரைக்குப்பின் ஒளிக்கப்படுவதை தடுக்கவும், உண்மை நிகழ்வுகளை வெளிக்கொணர்ந்து, அறியாமையில் வாழும் சமூகத்தை சத்தியத்தின் பக்கம் மீட்டெடுக்க, சிந்தனைக்கு வித்திடும் தளத்தை கட்டியெழுப்ப, நம் முத்துபேட்டை டுடே குடும்பம் இறையருளால் தங்களின் சக்திக்கு உட்பட்ட பணிகளை மேற்கொள்ளும். இன் ஷா அல்லாஹ்!

1 comment:

  1. Va alaikkumussalam varah...

    Nalla muyarchi !!!! vaarlthukkal!!!

    Best wishes from...

    Muthupettai vaal kuwait nanbarkal

    ReplyDelete