தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திருவாரூர் மாவட்ட விளையாட்டுப்பிரிவு சார்பில் மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இன்று மாணவர் மற்றும் மாணவியருக்கான தடகளம், ஹாக்கி மற்றும் நீச்சல் போட்டிகளை திருவாரூர் மாவட்ட விளை யாட்டரங்கில் நடைபெறுகிறது.
தடகள விளையாட்டுக்களில் மாணவர் மற்றும் மாணவியர்களுக்கு 100மீ, 800மீ, 1500மீ ஓட்டம், நீளம் தாண்டுதல் மற்றும் குண்டு எறிதல் போட்டிகள் நடத்தப்படுகிறது. போட்டிகளில் 17 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவியர்கள் மட்டுமே கலந்து கொள்ளலாம். தடகளம் மற்றும் நீச்சல் விளையாட்டில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறுபவர்களுக்கும் ஹாக்கி விளையாட்டில் முதல் 2 இடங்களை பெறுபவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும்.
அனைத்து போட்டிகளும் சரியாக காலை 9 மணிக்கு துவக்கப்படும், ஒரு போட்டியாளர் இரண்டு போட்டிகளில் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார். போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவியர்கள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் வயது சான்றிதழ் பெற்று வரவேண்டும்.
திருவாரூர் மாவட்டத்திலுள்ள பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்கள் இப்போட்டிகளில் கலந்துகொண்டு பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த தகவலை திருவாரூர் மாவட்ட கலெக்டர் சி.நடராசன் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment