முத்துப்பேட்டை டுடே! தங்களை அன்புடன் வரவேற்கிறது, உங்களின் கருத்துக்களும், ஆலோசனைகளும் இல்லாமல் இப்பணி சாத்தியம் இல்லை என்று "MTEAM" ஆழமாக நம்புகிறது. எனவே உங்களுடைய பங்களிப்பையும், ஆதரவையும் வரவேற்கின்றோம். செய்திகள் மற்றும் கட்டுரைகள் சம்மந்தமாக தொடர்பு கொள்ள teammtoday@gmail.com என்ற மின்அஞ்சலுக்கு தங்களின் அஞ்சல்களை அனுப்புமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

Monday, 14 October 2013

முத்துப்பேட்டை அருகே பயங்கர வெடி மருந்துகள் பறிமுதல்! -சதி செயலுக்காக பதுக்கப்பட்டவையா?

முத்துப்பேட்டையை அடுத்த ஜாம்பவான்ஓடை, வயிரவன்சோலையில்  ஒரு வீட்டில் வெடிமருந்து பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து முத்துப்பேட்டை போலீசார் ஜாம்பவான்ஓடையில் சோதனை நடத்தினர். 


அப்போது ஜெயபால் என்பவரின் வீட்டில் பயங்கர வெடிபொருட்கள் தயாரிக்க பயன்படுத்தும் மூன்றரை கிலோ வெடிமருந்துகள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டன. இதனை அடுத்து  பயங்கர வெடிபொருட்கள் பதுக்கி வைத்தது தொடர்பாக ஜெயபால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் தீவிரவாத சதி செயலுக்காக வெடிமருந்துகள் பதுக்கி வைக்கபட்டதா? என்ற கோணத்தில் முத்துப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

No comments:

Post a Comment