முத்துப்பேட்டை டுடே! தங்களை அன்புடன் வரவேற்கிறது, உங்களின் கருத்துக்களும், ஆலோசனைகளும் இல்லாமல் இப்பணி சாத்தியம் இல்லை என்று "MTEAM" ஆழமாக நம்புகிறது. எனவே உங்களுடைய பங்களிப்பையும், ஆதரவையும் வரவேற்கின்றோம். செய்திகள் மற்றும் கட்டுரைகள் சம்மந்தமாக தொடர்பு கொள்ள teammtoday@gmail.com என்ற மின்அஞ்சலுக்கு தங்களின் அஞ்சல்களை அனுப்புமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

Wednesday, 9 October 2013

துப்பாக்கிச்சூடு,கார்க்குண்டு வெடிப்பு,ராக்கெட் தாக்குதல்: எகிப்தில் ராணுவத்தினர் உட்பட 10 பேர் மரணம்!

கெய்ரோ: எகிப்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று ராணுவத்தினரை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டனர்.சூயஸ் கால்வாய் நகரமான இஸ்மாயிலியாவில் ரோந்து சென்றுகொண்டிருந்த ராணுவத்தினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 5 படை வீரர்கள் கொல்லப்பட்டனர்.தெற்கு சினாய் பகுதியில் ராணுவ தலைமயகத்தில் கார்க் குண்டுவெடித்து உயர் அதிகாரிகள் உள்பட 5 பேர் கொல்லப்பட்டனர்.


கெய்ரோவில் தொலைக்காட்சி ஒளிபரப்பு மையம் மீது ராக்கெட் வீச்சு தாக்குதல் நடந்தது.ராணுவ சதிப்புரட்சியை தொடர்ந்து எகிப்தில் மக்கள் எழுச்சிப்போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.


இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது சர்வாதிகார ராணுவம் மீண்டும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை நடத்தியது.இதில் 53 பேர்கொல்லப்பட்டனர். இதனைத்தொடர்ந்து பல்வேறு இடங்களில் தாக்குதல் நடந்த செய்திகள் வெளியாகியுள்ளன.

பழங்குடியினருக்கு செல்வாக்கு மிகுந்து வடக்கு சினாய் பகுதியில் அடிக்கடி ராணுவத்தினர் மீது தாக்குதல் நடப்பது வழக்கம்.ஆனால், தெற்கு சினாய் பகுதி அமைதியாக இருந்து வந்தது.

இப்பகுதியில் உள்ள சுற்றுலா மையங்கள் எகிப்தின் பொருளாதாரத்திற்கு அதிகம் உதவக்கூடியவை. இங்குள்ள அல்தோர் ராணுவ மையத்தில் கார்க் குண்டு வெடித்துள்ளது.இதில் கட்டிடம் இடிந்தது.

இடிபாடுகளுக்கிடையே ஆட்கள் சிக்கியிருக்கலாம் என கருதப்படுகிறது.கெய்ரோவிற்கு அருகில் உள்ள மஅதியில் உள்ள தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையம் மீது ராக்கெட் தாக்குதல் நடந்தது.இதில் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை.

இஸ்ரேல் மீது எகிப்து தாக்குதல் நடத்திய 40 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தை வலுப்படுத்த இஃவானுல் முஸ்லிமீன் அழைப்பு விடுத்திருந்தது.

ராணுவத்தினரும், அவர்களின் ஆதரவாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை கூட்டுப்படுகொலைச் செய்தனர்.


No comments:

Post a Comment