முத்துப்பேட்டை டுடே! தங்களை அன்புடன் வரவேற்கிறது, உங்களின் கருத்துக்களும், ஆலோசனைகளும் இல்லாமல் இப்பணி சாத்தியம் இல்லை என்று "MTEAM" ஆழமாக நம்புகிறது. எனவே உங்களுடைய பங்களிப்பையும், ஆதரவையும் வரவேற்கின்றோம். செய்திகள் மற்றும் கட்டுரைகள் சம்மந்தமாக தொடர்பு கொள்ள teammtoday@gmail.com என்ற மின்அஞ்சலுக்கு தங்களின் அஞ்சல்களை அனுப்புமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

Monday, 14 October 2013

முஸாஃபர் நகர் கலவரத்தை பெருமையுடன் கொண்டாடும் தொலைபேசி உரையாடல்கள்!

முஸாஃபர் நகர் கலவரத்தில் முஸ்லிம்கள் கொலைச் செய்யப்படுவதையும், அவர்களுடைய வீடுகள் தீக்கிரையாக்கப்படுவதையும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொள்ளும் தொலைபேசி உரையாடல்கள் வெளியாகியுள்ளன. ரிஹாய் மஞ்ச் என்ற அமைப்பும் இந்த தொலைபேசி உரையாடல்களை வெளியிட்டுள்ளது.
 
கலவர பகுதிகளில் போலீஸ் தாமதமாக வருவதை ஒப்புக்கொள்ளும் ஆதாரமும், தொலைபேசி உரையாடலில் இடம்பெற்றுள்ளது.
 
குத்பா, குத்பி கிராமங்களில் செப்டம்பர் 8-ஆம் தேதி ஜாட்டுகள் இடையே நடந்த தொலைபேசி உரையாடல்கள் அடங்கிய மெமரி சிப்பை ரிஹாய் மஞ்ச் அமைப்பின் செய்தி தொடர்பாளர் ராஜீவ் யாதவ் செய்தியாளர்களிடம் கேட்கச் செய்தார்.
 
உரையாடல்கள் ஒன்றில், ‘அவர்கள் (முஸ்லிம்கள்) கொல்லப்பட்டார்களா?’ என்று பெண் குரல் கேட்கிறது. ‘ஆம் அவர்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள்என்று ஆண் ஒருவர் பதில் கூறுகிறார். இதனை உறுதிச் செய்த அந்த பெண் மீண்டும் கேட்கிறார். ‘ஆம் உறுதிச்செய்யப்பட்டதுஎன்று ஆண் பதில் கூறுகிறார். ‘வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுவிட்டனஎன்றும் அந்த நபர் கூறுகிறார்.
 
பி..சி (ப்ரொவிஷனல் ஆம்ட் கான்ஸ்டபுலரி) வந்துவிட்டார்களா?’ என்ற கேள்விக்கு, ‘அவர்களிடம் தாமதமாக வந்தால் போதும் என்று கூறப்பட்டுள்ளது.’ என்று பதில் குரல் கூறுகிறது.

 
குத்பியில் குறைந்தது ஐந்து அல்லது ஆறு நபர்கள் கொல்லப்பட்டுள்ளனர்என்று ஆண் குரல் கூறும்போது, ‘நல்லதுஎன்று அந்த பெண் பதில் கூறுகிறார்.

 
இன்னொரு உரையாடலில் ஒரு பெண், இன்னொரு நபரிடம் கொலைகளைக் குறித்தும், தீவைப்புகளைக் குறித்தும் தமாஷாக கூறி சிரிக்கிறார்.
 
நம்முடைய கண்ணியத்தை இழந்துவிடாதீர்கள்:’ என்று அந்த பெண், ஆணின் உணர்ச்சியை தூண்டிவிடுகிறார். இரண்டு பெண்களிடையேயான உரையாடலில்ஹிந்துக்கள் காரியமாக எதனையும் செய்யவில்லை. எத்தனை நபர்களை கொன்றாலும் நாங்கள் எதுவும் செய்யமாட்டோம் என்று போலீஸ் கூறுகிறது.’ என்று கூறப்படுகிறது.

 
முஸ்லிம் கிராமங்களில் கூட்டுப் படுகொலைகள் நடப்பதுக் குறித்தும் துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களை கொண்டு சேர்ப்பது குறித்தும் பல்வேறு உரையாடல்களில் கூறப்படுகிறது.
 
கூட்டுப் படுகொலைகளை பெருமையுடன் பேசுவதும் தொலைபேசி உரையாடல்களில் இடம்பெற்றுள்ளன.

No comments:

Post a Comment