முத்துப்பேட்டை டுடே! தங்களை அன்புடன் வரவேற்கிறது, உங்களின் கருத்துக்களும், ஆலோசனைகளும் இல்லாமல் இப்பணி சாத்தியம் இல்லை என்று "MTEAM" ஆழமாக நம்புகிறது. எனவே உங்களுடைய பங்களிப்பையும், ஆதரவையும் வரவேற்கின்றோம். செய்திகள் மற்றும் கட்டுரைகள் சம்மந்தமாக தொடர்பு கொள்ள teammtoday@gmail.com என்ற மின்அஞ்சலுக்கு தங்களின் அஞ்சல்களை அனுப்புமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

Monday, 14 October 2013

ராமர் கோயில் மறுகட்டமைப்பு! -உ.பி. அரசின் கடிதத்தால் சர்ச்சை

யோத்தியில் ராமர் கோயில் கட்டுவது தொடர்பான உத்தரப்பிரதேச அரசின் கடிதத்தால் சர்ச்சை எழுந்துள்ளது. குஜராத் மாநிலம், சோமநாத்தில் பிரமாண்டமான கோயில் கட்டப்பட்டது போல, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது தொடர்பான நாடாளுமன்ற சட்டம் குறித்து விவாதிக்க அக்டோபர் 14-ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது என டி.ஜி.பி உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு உள்துறை செயலர் சர்வேஷ் குமார் மிஸ்ரா அக்டோபர் 9-ஆம் தேதி அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கடிதத்தால் சர்ச்சை எழுந்துள்ளது.

இது குறித்து உள்துறை முதன்மைச் செயலர் ஆர்.எம்.ஸ்ரீவாஸ்தவா செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியது: இந்தக் கடிதத்தில் சில தவறுகள் நிகழ்ந்துள்ளன. அக்டோபர் 14-ஆம் தேதி கூட்டம், கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நோக்கத்துக்காக கூட்டப்படவில்லை. விஷ்வ ஹிந்து பரிஷத் அக்டோபர் 18-ஆம் தேதி நடத்தும் ‘சங்கல்ப தினம்’ குறித்த உளவுத் துறை தகவல்களும் கூட இந்தக் கடிதத்தில் இடம்பெற்றுள்ளன.
இந்தத் தகவல்கள் பொதுமக்களுக்குத் தெரியும் வண்ணம் கடிதத்தில் இடம் பெற்றிருக்கக் கூடாது. இது தொடர்பாக உரிய அதிகாரிகளுக்கும், உள்துறையை கவனிக்கும் முதல்வர் அகிலேஷ் யாதவுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடைநிலை ஊழியர்களின் தவறால் இது நிகழ்ந்துள்ளது. இதற்கு பொறுப்பேற்று மன்னிப்பு கோருகிறேன். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.
இந்தக் கடிதத்தில் இடம் பெற்றவைகளை அரசின் கொள்கை முடிவாகக் கருதக் கூடாது. அரசு அதிகாரிகள் தொடர்ந்து வாரம் முழுவதும் பணிபுரிவதால் இதுபோன்று தவறுகள் அவ்வப்போது நிகழ்கின்றன என்றார்.
டி.ஜி.பி. ஏ.டி.ஜி.பி. (சட்டம்-ஒழுங்கு), ஏ.டி.ஜி.பி (உளவுத் துறை), ஐ.ஜி. (சட்டம்-ஒழுங்கு), ஐ.ஜி. (ரயில்வே, லக்னெள), ஐ.ஜி. (லக்னெள), ஐ.ஜி. (ஃபைசாபாத்), ஆட்சியர், மாவட்ட கண்காணிப்பாளர் (ஃபைசாபாத்) ஆகியோருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment