முத்துப்பேட்டை டுடே! தங்களை அன்புடன் வரவேற்கிறது, உங்களின் கருத்துக்களும், ஆலோசனைகளும் இல்லாமல் இப்பணி சாத்தியம் இல்லை என்று "MTEAM" ஆழமாக நம்புகிறது. எனவே உங்களுடைய பங்களிப்பையும், ஆதரவையும் வரவேற்கின்றோம். செய்திகள் மற்றும் கட்டுரைகள் சம்மந்தமாக தொடர்பு கொள்ள teammtoday@gmail.com என்ற மின்அஞ்சலுக்கு தங்களின் அஞ்சல்களை அனுப்புமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

Thursday, 3 October 2013

வெள்ளைக்காரனிடமிருந்து சுதந்திரத்தை பெற்றுத்தந்த மகாத்மாவே! காணாமல் போன குளத்தை கண்டுபிடித்து கொடுங்கள்! -முத்துப்பேட்டையில் வினோத மனு!

முத்துப்பேட்டை: தெற்குத்தெரு நிஜாமுதீன் அவர்கள், நேற்று ஊராட்சி அலுவலகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலையிடம் வினோத மனு ஒன்றை கொடுத்துள்ளார்.


அந்த மனுவில் கூறியது: பேரூராட்சிக்கு சொந்தமான "ஜானகி குட்டை" என்ற குளத்தை ரூ.900 ஏலத் தொகையும், ரூ.108 வரியும் கட்டி கடந்த 2012 செப்டம்பர் மதம் ஏலம் எடுத்தேன். குளத்தில் மீன்குஞ்சுகள் விட குளத்தை போய் பார்த்த போது இருந்த இடத்தில் குளத்தை காணவில்லை.

இது குறித்து பேரூராட்சி நிர்வாகம், காவல் நிலையம், தமிழக முதல்வர், மாவட்ட கலெக்டர், உட்பட அணைத்து அதிகாரிகளிடமும் குளத்தை கண்டுபிடுத்து தர கோரிக்கை விடுத்தேன். இதுவரை பலன் இல்லை.

நஷ்டஈடு கேட்டு பேரூராட்சிக்கு கோர்ட் நோட்டீஸ் அனுப்பினேன், பதில் இல்லை. கடைசியாக மக்களிடமே குளத்தை கண்டுபிடுத்து தர துண்டு பிரசுரம் கொடுத்தேன். அதற்கும் தீர்வு இல்லை. எனக்கு வேறு வழியும் தெரியவில்லை, வெள்ளைக்காரனிடமிருந்து சுதந்திரத்தை பெற்றுத்தந்த நீங்கள் காணாமல் போன நான் ஏலம் எடுத்த குளத்தை கண்டுபிடித்து கொடுங்கள். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.

தொடர்ந்து சிலை முன் பேரூராட்சிக்கு எதிராக கோஷங்களை எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தினார்.

No comments:

Post a Comment