சித்தூர்: ஆந்திராவில், தனி தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று முதல் 72 மணி நேர முழு அடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவை தெலுங்கானா மற்றும் சீமாந்திரா என இரு மாநிலங்களாக பிரிக்க மத்திய அரசு முடிவு செய்து, கடந்த ஜூலை மாதம் 30 ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து, நேற்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஆந்திராவை பிரிக்கவும், இரு மாநிலங்களுக்கும் பொதுவான தலைநகராக 10 ஆண்டுகளுக்கு ஐதராபாத் செயல்படவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதற்கிடையே, ஒருங்கிணைந்த ஆந்திராவை வலியுறுத்தி கடந்த ஜூலை 30 ஆம் தேதி முதல் ஆந்திராவில் போராட்டங்கள் வலுவடைந்து வருகிறது. இரு மாநிலங்களுக்கும் ஐதராபாத் தலைநகராக இருக்கும் என நேற்று மத்திய அரசு அறிவித்த நிலையில், இன்று முதல் 72 மணி நேர முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆந்திராவில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த முழு அடைப்புக்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மற்றும் சி.கே.பாபு எம்.எல்.ஏ. ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த முழு அடைப்பு காரணமாக திருப்பதி மற்றும் திருமலை போன்ற வழிபாட்டு தலங்களுக்கும் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2 மாதங்களாக நடந்து வரும் போராட்டத்தினால், ஆந்திரா மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த முழு அடைப்பு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை மேலும் பாதிக்கப்படும்.

No comments:
Post a Comment