முத்துப்பேட்டை டுடே! தங்களை அன்புடன் வரவேற்கிறது, உங்களின் கருத்துக்களும், ஆலோசனைகளும் இல்லாமல் இப்பணி சாத்தியம் இல்லை என்று "MTEAM" ஆழமாக நம்புகிறது. எனவே உங்களுடைய பங்களிப்பையும், ஆதரவையும் வரவேற்கின்றோம். செய்திகள் மற்றும் கட்டுரைகள் சம்மந்தமாக தொடர்பு கொள்ள teammtoday@gmail.com என்ற மின்அஞ்சலுக்கு தங்களின் அஞ்சல்களை அனுப்புமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

Friday, 4 October 2013

பிரிட்டனில் முதன் முறையாக நடந்த ஹலால் உணவு திருவிழா!

ண்டன்: பிரிட்டன் நாட்டில் முதன் முறையாக ஹலால் உணவு திருவிழா சென்ற வார இறுதியில் நடைபெற்றது. “ஹலால் ஃபுட் ஃபெஸ்டிவெல் 2013″ (Halal Food Festival2013) என்ற பெயரில் நடக்கும் உணவுத் திருவிழாவின் இயக்குநர்களில் ஒருவரான நோமன் கவாஜா இது குறித்து பி.பி.சி.க்கு அளித்த பேட்டியில் கூறியது:

 
நீங்கள் ஒரு முஸ்லிம், அதனால் உங்களுக்கு ஃபெர்ராரி சொகுசுக் கார் ஓட்டும் உரிமை இல்லை என்று சொன்னால் எப்படியிருக்குமோ அதுபோலத்தான் நீங்கள் ஒரு முஸ்லிம், அதனால் நீங்கள் மிஷலின் நட்சத்திர அந்தஸ்து பெற்ற உணவு விடுதிகளில் சாப்பிட முடியாது என்று சொல்வதும் இருக்கிறது.

 
முஸ்லிம்களுக்கும் அது மாதிரியான இடங்களில் சென்று சாப்பிட உரிமை இருக்கிறது. அவர்களுக்கென சில ஹலால் உணவுகளையும் அவ்விடுதிகள் பரிமாறுவது அவசியம்என அவர் கூறினார்.
பிரிட்டனில் கிட்டத்தட்ட முப்பது லட்சம் முஸ்லிம்கள் வாழுகின்றனர். நல்ல வேலையில் உள்ளவர்களாகவும், நல்ல வருவாய் ஈட்டுபவர்களாகவும் பிரிட்டனின் இரண்டாம் தலைமுறை முஸ்லிம் குடியேறிகள் பலர் உருவாகியிருக்கின்றனர்.
 
பிரிட்டனின் முஸ்லிம் மக்களுடைய வாழ்க்கைத் தரம் உயர்ந்து வருகின்ற சூழலில் அவர்களுக்குரிய உணவுகளை தயாரித்து வழங்குவதில் வியாபார நலன் இருப்பதை பிரிட்டிஷ் உணவு நிறுவனங்களும், மேட்டுக்குடி மக்களுக்கான உணவு விடுதிகளும் உணர்ந்துள்ளன என்பதை பறைசாற்றுவதாக இந்த நிகழ்வு அமைந்திருந்தது.
 
ஹலால் என்பது முஸ்லிம்களுக்கு இஸ்லாத்தினால் அனுமதிக்கப்பட்ட விஷயங்களைக் குறிக்கிறது. உணவு என்று வரும்போது, ஆரோக்கியமாகவும் உயிரோடு இருக்கும் விலங்குகளை மட்டுமே அறுக்க வேண்டும், விலங்கின் குரல்வளையை ஒரே வெட்டில் வேகமாக அறுத்து, அதனுடைய எல்லா ரத்தத்தையும் முழுமையாக வடிய விட வேண்டும் என்றுள்ளது.
 
பன்றி இறைச்சியை சாப்பிடக் கூடாது, மது கலந்திருக்கக் கூடாது போன்ற நிபந்தனைகளும் உண்டு.
 
ஐரோப்பா, அமெரிக்கா போன்ற இடங்களில், உணவுக்காக விலங்குகளைக் கொல்லும்போது, அது அறவே வலியை உணராமல் இருக்க வேண்டும் என்பதற்காக அதனை உணர்விழக்கச் செய்து பின்னர் கொல்ல வேண்டும் என்ற விதி உள்ளது.
 
தலையில் இரும்பு குட்டி ஒன்றை சட்டென அடித்தோ, மின்சாரத்தை பாய்ச்சியோ, சுயநினைவு இழக்கச் செய்கிற மருந்து கொடுத்தோ விலங்கை உணர்விழக்கச் செய்யும் வழிமுறைகள் கையாளப்படுகின்றன.
 
ஆனால் முஸ்லிம் சமூகத்தாருக்கும், யூத சமூகத்தாருக்கும் மதக் காரணங்களை முன்னிட்டு இந்த விதியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
 
ஹலால் முறையில் சுயநினைவோடு இருக்கும் விலங்கைக் கொல்வதில் மிருகச் சித்ரவதை அடங்கியிருக்கிறது என மேற்குலகில் பலர் தவறாக புரிந்து வைத்துள்ளனர். ஆனால் ஹலால் முறையில் விலங்குகளைக் கொல்வதில் சித்ரவதை இல்லை என உணவுத் திருவிழாவின் தோற்றுநர் இம்ரான் கவுசர் கூறுகிறார்.
 
கூரான கத்தியால் கழுத்தை ஒரே வெட்டில் அறுக்க வேண்டும் என்பதே கூட விலங்குக்கு வலியைக் குறைக்க வேண்டும் என்ற நோக்கில்தான்என்கிறார் அவர்.

 
இன்று பிரிட்டனில் சந்தையில் கிடைக்கும் ஹலால் இறைச்சியில் 80 சதவீதத்துக்கும் அதிகமானவை முன்கூட்டியே உணர்விழக்கச் செய்து பின்னர் ஹலால் முறையில் அறுக்கப்பட்ட விலங்குகள்தான். விலங்கை உணர்விழக்கச் செய்து பின்னர் ஹலால் முறையில் அறுத்தாலும் அது ஹலால் ஆகுமா என்ற வேறு ஒரு கருத்தொற்றுமை இல்லாத விவகாரமும் இதில் உள்ளது.
 
இந்த ஹலால் உணவுத் திருவிழாவுக்கு சில எதிர்ப்புகளும் எழாமல் இல்லை. ஆனால் தற்போது லண்டன் வாழ் மக்களில் பத்தில் ஒருவர் முஸ்லிம் என்பதை சுட்டிக்காட்டி மாநகரின் மேயர் போரிஸ் ஜான்சன் இந்த நிகழ்ச்சிக்கு ஆதரவு நல்கியிருந்தார்.

No comments:

Post a Comment