கூடங்குளம் அணு உலையை மூட வலியுறுத்தியும், அணு உலைக்கு எதிராக போராடும் மக்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெறக் கோரியும் அணு உலைக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டது.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சி, மதிமுக, எஸ்.டி.பி.ஐ கட்சி, மமக, மே 17, விடுதலைச் சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் அமைப்புகள் கலந்து கொண்டன. போராட்டத்தின் போது இடிந்தகரையில் அணு உலைக்கு எதிராக நடந்து வரும் போராட்டம் தமிழர்களின் உரிமைக்கான போராட்டம் என்றும், அதற்கு தமிழக மக்கள் அனைவரும் ஆதரவு தெரிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
இதே போன்று நெல்லை, திண்டுக்கல், மதுரை, சேலம், கடலூர், புதுக்கோட்டை, திருவாரூர், ராமநாதபுரம், கோவை, திருப்பூர், செங்கல்பட்டு, .ஈரோடு மற்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் இந்த போராட்டம் நடைபெற்றது.

No comments:
Post a Comment