தீவிரவாதம் என்று காரணங்காட்டி அப்பாவி முஸ்லிம்களை கைது செய்யக் கூடாது. அப்படி தவறுதலாக அப்பாவி முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டிருந்தால் உடனே விடுவிக்கவும் அவர்களுக்கு இழப்பீட்டுத் தொகையும் வழங்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே மாநில முதல்வர்களுக்கு நேற்று கடிதம் அனுப்பி வைத்திருந்தார். இதற்கு பாரதிய ஜனதா கட்சி கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்திருந்தது.
கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசியத் தலைவர் ராஜ்நாத்சிங் "நாட்டிலேயே மிகப்பெரிய மதவாதக் கட்சி காங்கிரஸ்தான். ஆங்கிலேயர்கள் தங்கள் ஆட்சிக்காலத்தில் பிரித்தாளும் சூழ்ச்சியை கையாண்டதைப் போன்று நாடு சுதந்திரம் பெற்ற பிறகு வாக்கு வங்கி அரசியலுக்காக காங்கிரஸ் கட்சி அதே கொள்கையை பின்பற்றுகிறது. நாட்டில் மதநல்லிணக்கம் சீர்குலைந்தால் அதற்கு காங்கிரஸ் கட்சிதான் பொறுப்பு. நாட்டில் தேர்தல் வரும் போதெல்லாம் காங்கிரஸ் மத ரீதியாக பிரிவினை அரசியலில் ஈடுபடுவது வழக்கம்.
அப்பாவி முஸ்லிம் இளைஞர்களைக் காக்கும் விதமாக உள்துறை அமைச்சர் ஷிண்டே எழுதிய கடிதத்தைத் திரும்பப் பெறும் படி பிரதமர் வலியுறுத்த வேண்டும் " என்று கூறினார்

No comments:
Post a Comment