முத்துப்பேட்டை டுடே! தங்களை அன்புடன் வரவேற்கிறது, உங்களின் கருத்துக்களும், ஆலோசனைகளும் இல்லாமல் இப்பணி சாத்தியம் இல்லை என்று "MTEAM" ஆழமாக நம்புகிறது. எனவே உங்களுடைய பங்களிப்பையும், ஆதரவையும் வரவேற்கின்றோம். செய்திகள் மற்றும் கட்டுரைகள் சம்மந்தமாக தொடர்பு கொள்ள teammtoday@gmail.com என்ற மின்அஞ்சலுக்கு தங்களின் அஞ்சல்களை அனுப்புமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

Saturday, 12 October 2013

கரிகாலனுக்கு மனிமண்டபம் என்ற பெயரில் 112 ஆண்டு வரலாற்றுப் பள்ளிவாசலை இடிக்க தமிழக அரசு முயற்சி!


ஞ்சை மாவட்டம் கல்லணைக்கு அருகில், 1901ல் கட்டப்பட்ட 'மக்கா மஸ்ஜிதை' இடிக்கும் முயற்சியில் தமிழக அரசின் பொதுப் பணித்துறை அதிகாரிகள் களம் இறங்கியுள்ளனர்.  திருவெரும்பூரிலிருந்து 15 கி.மீ. தொலைவிலும் திருக்காட்டுப்பள்ளியிலிருந்து 17 கி.மீ. தொலைவிலும் இந்த பள்ளிவாசல் அமைந்துள்ளது. 

'மக்கா மஸ்ஜித்' என்று அழைக்கப்படும் இந்த பள்ளிவாசலைச் சுற்றி வீடுகளும் கடைகளும் உள்ளன. உள்ளுர் மக்களும், கல்லனைக்கு சுற்றுலா வரும் முஸ்லிம் பயணிகளும் இந்த பள்ளிவாசலில் தொழுது வருகின்றனர். 

தற்போது, கரிகால சோழனுக்கு தமிழக அரசு கல்லணைக்கு அருகில் ஒரு 'மணி மண்டபம்' கட்டி வருகின்றது. இந்த மணி மண்டபத்திற்கு சற்று தூரத்தில் உள்ள இந்த பள்ளிவாசலுக்கு அருகில் உள்ள வீடுகளை முதலில் பொதுப் பணித் துறையினர் இடித்தனர். பிறகு இந்த பள்ளிவாசலின் சுற்றுச் சுவரும் இடிக்கப்பட்டது. 

தற்போது, பள்ளிவாசலின் இமாம் தங்கும் வீட்டையும், பள்ளிவாசலின் கழிப்பறை பகுதியையும் இடிக்க பொதுப் பணித்துறையினர் முயன்று வருகின்றார்கள்.

இது தொடர்பாக  நேற்று 11.10.2013 வெள்ளிக்கிழமை அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பாக ஜீம்மா தொழுகைக்கு பின் ஆலோசணைக்கூட்டம் நடைபெற்றது. அதன்படி நாளை அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினரை கூட்டமைப்பு சார்பாக சந்திப்பது என முடிவெடுக்கப்பட்டது.அவர் ஒத்துழைப்பு அளிக்காவிட்டால் மக்கள் போராட்டம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் ஜமாத்துல் உலமா மாவட்ட துணைச்செயலாளர் அப்துல் ஸலாம் அவர்களும், SDPI, WPI, JAQH மற்றும் மனிதநேய மக்கள் கட்சி ஆகிய இயக்கங்கள் கலந்து கொண்டது.

No comments:

Post a Comment