முத்துப்பேட்டை டுடே! தங்களை அன்புடன் வரவேற்கிறது, உங்களின் கருத்துக்களும், ஆலோசனைகளும் இல்லாமல் இப்பணி சாத்தியம் இல்லை என்று "MTEAM" ஆழமாக நம்புகிறது. எனவே உங்களுடைய பங்களிப்பையும், ஆதரவையும் வரவேற்கின்றோம். செய்திகள் மற்றும் கட்டுரைகள் சம்மந்தமாக தொடர்பு கொள்ள teammtoday@gmail.com என்ற மின்அஞ்சலுக்கு தங்களின் அஞ்சல்களை அனுப்புமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

Wednesday, 9 October 2013

ஹமாஸ்-ன் காலித் மிஷ்அல், துருக்கி பிரதமர் ஏர்தூகான் திடீர் சந்திப்பு!

மாஸ்-ன் அரசியல் தலைவர் காலித் மிஷ்அல் நேற்று செவ்வாய்கிழமை (08.10.2013) அங்காராவுக்கு திடீர் விஜயம் மேற்கொண்டு, துருக்கி பிரதமர் ஏர்தூகானை சந்தித்து பலஸ்தீன நல்லிணக்க நடவடிக்கைகள் மற்றும் மத்திய கிழக்கின் நடப்புக்கள் குறித்துப் பேசியுள்ளார்.


துருக்கிய பிரதமரின் அலுவலகத்தில்தில் நடைபெற்ற இச்சந்திப்பு குறித்து அது நடைபெறுவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது. சந்திப்புக்கான வேண்டுகோள் பலஸ்தீனத் தரப்பிலிருந்தே விடுக்கப்பட்டதாக பிரதமர் அலுவலகத்திலிருந்து செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த சந்திப்பின்போது ஹமாஸ் மற்றும் பதஹ் இயக்கங்களுக்கு இடையிலான தேசிய நல்லிணக்கம், சிரிய நெருக்கடி, காஸாவின் நிலை குறித்தும் பேசப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

காஸாவை ஆட்சி செய்யும் ஹமாஸுக்கும் மேற்குக் கரையை ஆட்சி செய்யும் பதஹ்வுக்கும் இடையில் ;தொடரும் சில முரண்பாடுகள் காரணமாக நல்லிணக்க உடன்பாடு இல்லாமை தொடர்ந்து இருந்து வருவது  குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment