புதுடெல்லி : தாஜ்மகால், கஜுரோஹோ, குதுப் மினார், அஜந்தா எல்லோரா ஆகிய வரலாற்று இடங்களை 3டியில் பார்க்க ஆசையா? கவலையே பட வேண்டாம். கூகுளில் நீங்கள் 360 டிகிரி கோணத்தில் இவற்றை நீங்கள் ரசிக்கலாம். உலகம் முழுக்க உள்ள வரலாற்று புகழ்மிக்க இடங்களை 360 டிகிரி கோணத்தில் வெளிப்படுத்த கூகுள் முடிவு செய்துள்ளது. இதன்படி, கூகுல் இந்தியா நிறுவனம் இந்தியாவில் உள்ள வரலாற்று இடங்களை காட்ட ஏற்பாடு செய்துள்ளது.
மத்திய அரசின் தொல்லியல் துறை இதற்கான ஒத்துழப்பை தருகிறது. கூகுள் இந்தியா , தொல்லியல் துறை சேர்ந்து 100 வரலாற்று இடங்களை தேர்வு செய்துள்ளது.
இந்த பட்டியலில் தாஜ்மகால், குதுப் மினார், கஜுரோஹோ, அஜந்தா மற்றும் தென் மாநிலங்களில் முக்கிய வரலாற்று இடங்களும் உள்ளன.
‘புதிய தொழில்நுட்பங்களின் வசதியை கொண்டு, இந்தியாவில் உள்ள இந்த வரலாற்று இடங்களை மக்கள் கூகுளில் பார்க்க முடியும். கூகுள் கலைநோக்கு திட்டத்தின் அடிப்படையில் நாங்கள் இந்த முயற்சியில் இறங்கியுள்ளோம். 360 டிகிரி கோணத்தில் இந்த வரலாற்று இடங்களை நேரில் பார்ப்பது போன்ற உணர்வை மக்கள் பெறுவர்’ என்று கூகுள் இந்தியா நிறுவன துணை தலைவர் ராஜன் ஆனந்தன் கூறினார்.

No comments:
Post a Comment