முத்துப்பேட்டை டுடே! தங்களை அன்புடன் வரவேற்கிறது, உங்களின் கருத்துக்களும், ஆலோசனைகளும் இல்லாமல் இப்பணி சாத்தியம் இல்லை என்று "MTEAM" ஆழமாக நம்புகிறது. எனவே உங்களுடைய பங்களிப்பையும், ஆதரவையும் வரவேற்கின்றோம். செய்திகள் மற்றும் கட்டுரைகள் சம்மந்தமாக தொடர்பு கொள்ள teammtoday@gmail.com என்ற மின்அஞ்சலுக்கு தங்களின் அஞ்சல்களை அனுப்புமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

Friday, 1 November 2013

TNPSC குரூப் -2 தேர்வுக்கான இலவசப்பயிற்சி!

ல்கலைக்கழக மானியக்குழு (UGC) நிதி உதவியுடன் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் பயிற்சி மையத்தில் வரும் 06.11.2013 முதல் 22.11.2013 வரை எஸ்.சி/எஸ்.டி/ஓ.பி.சி மற்றும்  சிறுபான்மை மாணவர்களுக்கு TNPSC குரூப்-2 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறும் என அக்கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.

எனவே இப்பயிற்சி வகுப்புகளில்  சேர விரும்புவோர் தங்களது பெயரை 05.11.2013 தேதிக்குள் ஜமால் முஹம்மது கல்லூரியின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் பயிற்சி மையத்தில் பதிவு செய்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விருப்பமுள்ள மாணவர்கள் 9865224090 / 9843050153 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்


No comments:

Post a Comment